மர வியாபாரியாக வந்த இமாம் அலி
பெங்களூர்:
திருமங்கலத்தில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பித்த அல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலி, தான்கேரளாவிலிருந்து வந்துள்ள ஒரு மர வியாபாரி என்று கூறித் தான் பெங்களூரில் வீடு வாடகைக்கு எடுத்தான்.
இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில்,
தன் பெயர் ரவி என்று கூறிக் கொண்டு தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அவன் (இமாம் அலி) வந்துஎன்னிடம் வீடு வாடகைக்கு வேண்டுமென்று கேட்டான்.
கேரளாவில் மர வியாபாரம் செய்து வருவதாகவும் பெங்களூரில் அதன் மொத்த விற்பனைக் கடையைவைத்துள்ளதாகவும் அவன் கூறினான்.
பின்னர் ரூ.35,000 அட்வான்சாகக் கொடுத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். மாதா மாதம்வாடகையாக ரூ.3,000 தர வேண்டும் என்றும் நான் அவனிடம் கூறினேன்.
அதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த இவர்கள் (இமாம் அலியும் மற்ற நால்வரும்) அனைவரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றே எனக்குத் தெரியாது.
அவர்கள் நிறையத் தண்ணீரை செலவழித்தால், இனிமேல் தண்ணீர் தர முடியாது என்று கூறி அந்த வீட்டுக்குச்செல்லும் தண்ணீர் சப்ளையை நான் நிறுத்திவிட்டேன். இதையடுத்து அவர்கள் நாளை (செப்டம்பர் 30ம் தேதி)வீட்டைக் காலி செய்யப் போவதாகக் கூறினார்கள் என்றார் அந்த வீட்டின் உரிமையாளர்.
இந்நிலையில் தான் நேற்று ஒரு பெங்களூர் போலீஸ்காரரும் பெண் போலீஸ்காரரும் ஒரு தம்பதியைப் போலச்சென்று புதிதாக வாடகை வீடு தேடுபவர்கள் போல நடித்து வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.
மதுரை போலீசார் கொடுத்த ஒரு க்ளூவின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே இந்த வீட்டைப் போலீசார்நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
நேற்று அந்த வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு போட்டோவில் இமாம் அலி உள்ளிட்ட சிலர் இருந்ததைப்பார்த்த ரகசியப் போலீசார் இருவரும் இதுகுறித்து உடனடியாக பெங்களூர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல்கொடுத்தனர்.
இதையடுத்து தான் தமிழகத்தின் 25 கமாண்டோ பிரிவு போலீசாரும் பெங்களூர் போலீசாரும் கூட்டாகநடவடிக்கை மேற்கொண்டு இன்று அதிகாலை அந்த வீட்டைச் சுற்றி வளைத்து, இமாம் அலி உள்ளிட்டதீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே இமாம் அலி தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகையில்,
அந்த வீட்டிற்கு அவர்கள் வந்ததிலிருந்தே அவர்கள் அவ்வளவாக வெளியே வருவதே இல்லை.
அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள் என்பது இன்றைக்குத் தான் எங்களுக்குத் தெரிய வந்தது என்று அவர்கள்கூறினர்.
இதற்கிடையே பெங்களூரில் இமாம் அலி கும்பல் ஆறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாகவும், நேற்றுகூட அவன் ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் பெங்களூர் போலீஸ் கமிஷனரான சங்கிலியானாதெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள பல இந்துக் கோவில்களைக் குண்டு வைத்துத் தகர்க்கவும் இமாம் அலி தயாராகிவந்ததாகவும் அவர் கூறினார்.
இமாம் அலியைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவேஅறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications