""ஒழுங்கா பேச்சு நடத்தத் தெரியவில்லை"": ஜெ.க்கு கருணாநிதி குட்டு
சென்னை:
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒழுங்காகப் பேச்சுவார்த்தைநடத்தியிருந்தால் பிரச்சனை இந்த அளவுக்குப் போயிருக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில்நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
காவிரிப் பிரச்சனையில் ஜெயலலிதா தொடர்ந்து தவறான அணுகுமுறையையே கையாண்டு வருகிறார்.
தேவையற்ற வார்த்தைகளைக் கொட்டுவதால் அண்டை மாநிலமான கர்நாடகத்துடன் கசப்பான உறவுகளைத் தான்அவர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒழுங்கான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், காவிரிப் பிரச்சனையைத்தமிழக அரசு எப்போதோ தீர்த்திருக்கலாம்.
இப்போதும் இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு. இரு மாநில முதல்வர்களும் பேச்சு நடத்திகாவிரிப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கர்நாடக அரசு மீறும் போது நாம்வேறு என்ன தான் செய்வது?
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக விரைவில் அறவழியில் போராட்டம் நடத்தும். இதற்கான அறிவிப்பும்விரைவில் வெளியிடப்படும் என்றார் கருணாநிதி.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications