பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் மீண்டும் உயர்வு
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதம் மீண்டும் உயரும் என்று பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம் நாயக் கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே இவற்றின் விலைகள் தொடர்ந்து ஏறிக் கொண்டே வருகின்றன.
செப்டம்பர் முதல் வாரத்தில் கூட பெட்ரோல் விலை ரூ.1 வரை உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய ராம் நாயக் அக்டோபர் மாதத்தில் மீண்டும் பெட்ரோல்,டீசல் ஆகியவற்றின் விலைகள் உயரும் என்றார்.
கடந்த ஆறு மாதங்களில் சர்வதேசச் சந்தையில் இவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், இந்தியபெட்ரோலிய நிறுவனங்களும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றார் ராம்நாயக்.
-->












Click it and Unblock the Notifications