காவிரி: கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்த ஜெ. மறுப்பு
சென்னை:
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்தப் போவதில்லை என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் நேற்று ஜெயலலிதாவுக்கு பரிந்துரைசெய்திருந்தார். ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த தயார் என்று கிருஷ்ணாவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்த முடியாது என்று ஜெயலலிதா இன்று கூறிவிட்டார். இது தொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதை மேலும் தாமதப்படுத்துவதற்காகவே பேச்சுக்குத் தயார் என்று கிருஷ்ணாகூறியுள்ளார்.
இப்படி ஒரு பேச்சுவார்த்தைக்குப் பரிந்துரை செய்துள்ளதன் மூலம், காவிரி ஆணையத்தின் தலைவர் என்றபொறுப்புக்கே தான் லாயக்கில்லாதவர் என்பதை வாஜ்பாயும் நிரூபித்து விட்டார்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து நான் முதல்வரானது முதல் பேச்சுவார்த்தைக்குவருமாறு கிருஷ்ணாவுக்கு பலமுறை நான் அழைப்பு விடுத்துக் கொண்டு தான் இருந்தேன்.
ஆனால் அப்போதெல்லாம் இதைப் பற்றிக் கண்டுகொள்ளாத பிரதமரும் கிருஷ்ணாவும் இப்போது மட்டும் பேச்சுநடத்த அழைப்பு விடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
தமிழக, கர்நாடக முதல்வர்களுக்கிடையே மொத்தம் 26 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளன. இதில் ஒன்று கூடஉருப்படியாக நடைபெறாமல் போனதைத் தொடர்ந்தே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என்று ஒரு நியாயமானதீர்ப்பை வழங்கியது. ஆனால் அதையும் கர்நாடக அரசு மீறி விட்டது.
கர்நாடக அரசு மீது நாங்கள் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கின் மூலம் தமிழக விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம்ஒரு நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை:
இதற்கிடையே கர்நாடக அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை நாளைஉச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாளை இந்த விசாரணை நடைபெறவுள்ளதால், நாடே உச்ச நீதிமன்றத்தின்இந்த விசாரணையையும் தீர்ப்பையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே காவிரிக் கண்காணிப்புக் குழுவின் கூட்டமும் நாளை பிற்பகல் டெல்லியில் நடைபெறவுள்ளதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக அணைகளின் நீர் இருப்பை கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்த கண்காணிப்புக் குழுவினர், தமிழகத்தின்எதிர்ப்பு காரணமாக மேட்டூர் அணையைப் பார்வையிடவில்லை என்பதும் நினைவிருக்கலாம்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications