காவிரி கண்காணிப்பு குழு இன்று மேட்டூர் வருகை
மேட்டூர்:
மேட்டூர் அணையைப் பார்வையிட காவிரி கண்காணிப்புக் குழு அதன் தலைவர் கோஸ்வாமி தலைமையில் இன்றுதமிழகம் வருகிறது.
கர்நாடக அணைகளை ஏற்கனவே பார்வையிட்ட கண்காணிப்புக் குழுவினர், மேட்டூருக்கும் சென்று அணையின்நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழுவினருக்கு தமிழக அரசு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று தமிழகம் வரும் கண்காணிப்புக் குழுவினர் நேரடியாக மேட்டூர் அணைக்கு சென்று அங்குஅணையின் நீர் இருப்பைப் பார்வையிடுகிறார்கள்.
அங்கிருந்து தஞ்சாவூர் செல்லும் குழுவினர், காவிரிப் பாசனப் பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகேட்கிறார்கள். பின்னர் நாகப்பட்டினத்துக்கும் திருவாரூருக்கும் கண்காணிப்புக் குழுவினர் சென்று பயிர்களைப்பார்வையிடுகிறார்கள்.
அதன் பிறகு டெல்லி செல்லும் இக்குழுவினர் கர்நாடக மற்றும் தமிழக அணைகளின் நீர் இருப்பு, பாசனப்பகுதிகளின் நிலைமை குறித்து பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
அந்த அறிக்கையின் நகல் உச்ச நீதிமன்றத்தில் வரும் 4ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
-->












Click it and Unblock the Notifications