2 இந்திய கடற்படை விமானங்கள் நடு வானில் மோதல்: 16 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பனாஜி (கோவா):

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 2 கடற்படை விமானங்கள் இன்று காலை டபோலின் விமான நிலையத்திற்குஅருகே பறந்துகொண்டிருந்த போது நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 4 பைலட்டுகள் உள்பட12 கடற்படை வீரர்கள் பலியாகினர். மேலும் தரையில் இருந்த 4 பேர் விமான பாகங்கள் விழுந்து உயிரிழந்தனர்.19 பேர் காயமடைந்தனர்.

கோவா தலைநகர் பனாஜியிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இந்தச் சம்பவம் நடந்தது.


ஐ.எல்.-38 என்ற ரகத்தைச் சேர்ந்த இந்த இரு கடற்படை விமானங்களும் இந்திய கடற்படையின் விமானப்பிரிவான 315வது ஸ்கூவாட்ரனைச் சேர்ந்தவை. இந்த ஸ்கூவாட்ரனின் பெயர் "விண்ட் ஸ்டால்லியன்ஸ்" (Windstallions).

இந்தப் பிரிவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று காலை இந்த விமானங்கள் வானில் சாகஸ்நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தன.

அப்போது காலை 10 மணி. சாகஸத்தில் ஈடுபட்டிருந்த இந்த இரு விமானங்களும் எதிர்பாராத விதமாக திடீரெனபயங்கர வேகத்தில் நடுவானிலேயே நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெடித்துச் சிதறின.

இரு விமானங்களின் உடைந்த பாகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிளில் விழுந்தன. புதிதாகக் கட்டப்பட்டு ஒருகட்டடம் இதில் தரைமட்டமானது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 தொழிலாளர்களும் இடிபாடுகளில்சிக்கி உயிரிழந்தனர்.

19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பலருக்கும் 95 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதில் இரு விமானங்களிலும் இருந்த 12 வீரர்களும் பலியாகிவிட்டனர். இரு விமானங்களிலும் தலா 2பைலட்டுகளும் 4 வீரர்களும் இருந்தனர். இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோவா கடற்படைத் தளத்திலிருந்து உடனடியாகத் தீயணைப்பு வீரர்களும் மீட்புக் குழுவினரும் சம்பவம் நடந்தஇடத்திற்கு விரைந்தன. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படை போலீசாரும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+