அதிரடிப்படை வீரர்கள் தாக்கி ஆதிவாசி மரணம்?
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
அதிரடிப்படை வீரர்கள் தாக்கியதில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆதிவாசி இறந்து விட்டதாககிராமத்து மக்கள் புகார் கூறியுள்ளனர்.
சத்தியமங்கலம் வனப் பகுதியில் அடங்கியுள்ள கோட்டமானூத்துர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசியானசின்னுசாமி என்பவரை சில நாட்களுக்கு முன் அதிரடிப்படை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
வீரப்பன் இருக்குமிடம் குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. பின்னர்சின்னுசாமியை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டனர் போலீஸார்.
இந்த நிலையில் 27ம் தேதி சின்னுசாமி இறந்து விட்டார். போலீஸாரின் அடி, உதையினால் பாதிக்கப்பட்டு தான்அவர் இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் கொண்டு வந்தபோதே, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சின்னுசாமி இருந்ததாகவும் அவர்கள்கூறுகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications