நாகப்பாவை மீட்பது குறித்து பெர்னாண்டஸ்- ராமதாஸ் நேரில் ஆலோசனை
டெல்லி:
வீரப்பனிடம் சிக்கியுள்ள நாகப்பாவை மீட்பது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் உதவியை பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோரியுள்ளார். பெர்னாண்டசின் அழைப்பின் பேரில் நேற்று ராமதாஸ் டெல்லி சென்றார்.இருவரும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தனர்.
அப்போது காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தமிழகத்தை ஏமாற்றி வருவதையும் பெர்னாண்சிடம் ராமதாஸ் கிளப்பியதாகக்கூறப்படுகிறது.
பெர்னாண்டசுடன் பேச்சு நடத்திவிட்டு வந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
வீரப்பனை எனக்கு முன் பின் தெரியாது. அந்த ராஜ்குமாரை மீட்டது போல வீரப்பனுடன் சுமூகமாகப் பேச்சு நடத்தி தான்நாகப்பாவை மீட்க வேண்டும். கடந்த முறை வீரப்பனைச் சந்திக்கச் சென்ற நெடுமாறனிடம் சில தகவல்களை சொல்லிஅனுப்பினேன். இப்போது யார் தூதராகச் சென்றாலும் அதையே தான் சொல்லி அனுப்புவேன்.
நாகப்பாவை மீட்க எனது உதவியை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நாடியது உண்மை தான்.
ஆனால், காவிரி விவகாரத்தில் அவர் நடந்து கொள்ளும் முறை எனக்குப் பிடிக்கவில்லை. தமிழர்களை வாட்டும் கர்நாடகமுதல்வரை சந்திக்க நான் விரும்பவில்லை. இதனால் அவருடனான சந்திப்பை நானே தவிர்த்துவிட்டேன்.
தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலம் வறண்டு கிடக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் இந்த ஆண்டு ஒரு போகம் சாகுபடி செய்துவிட்டுஇப்போது இரண்டாவது சாகுபடிக்காக பயிர்களை நட்டு வைத்திருக்கிறார்கள்.
கேட்டால் எங்கள் பயிர்களுக்கு நீர் வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஒரு சாகுபடி கூட நடக்கவில்லை.பயிரிடவே நீர் இல்லை.
கர்நாடகத்தின் இந்த அநியாய செயலுக்கு மன்னிப்பே கிடையாது. கிருஷ்ணா முதல்வராக இருக்கும் வரை காவிரி பிரச்சனைக்குதீர்வு காண முடியாது என்றே நினைக்கிறேன்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் போக்கும் சரியில்லை. தொடர்ந்து கர்நாடகம் குறைந்த அளவு நீரைத் தந்து வந்திருக்கிறது.அதை ஆரம்பத்திலேயே தட்டிக் கேட்காமல் இருந்துவிட்டது தமிழக அரசு.
முதலில் தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும். முதல்கட்டமாக தென்னிந்திய நதிகளையாவது இணைத்து இந்தவிவகாரத்துக்கு தீர்வு காண மத்திய அரசு முயல வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.
-->












Click it and Unblock the Notifications