திருச்சி அருகே கார்-வேன் மோதலில் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே மாருதி காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி ஒரு மாருதி கார் வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் பழனியிலிருந்துசென்னை நோக்கி ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.
திருச்சியை அடுத்த சிறுகனூர் அகரம் என்ற இடத்தில் காரும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழன்ர். அவர்கள் யார்என்று அடையாளம் தெரியவில்லை.
வேனில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளில் 15 பேர் காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications