ராக்கெட் லாஞ்ச்சர் விவகாரம்: "போட்டு" கொடுத்து மாட்டிய காங்கிரஸ் பிரமுகர்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் ராக்கெட் லாஞ்ச்சர் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒரு காங்கிரஸ்பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை கிரைம் பிராஞ்ச் சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 21ம் தேதி ராமேஸ்வரத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையின் போது ஒரு ராக்கெட் லாஞ்ச்சர்,ஏ.கே.47 துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக ராமேஸ்வரம் நகர தி.க. தலைவர் சிகாமணி உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இச்சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்உள்பட மூன்று பேரைப் போலீசார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்டுள்ள காங்கிரஸ் பிரமுகர் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளுக்கு டீசல், போதைப்பொருட்கள் போன்றவற்றை அனுப்பி வந்துள்ளார்.
கடந்த 1998ம் ஆண்டில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய போலீசார் முயற்சித்த போதுஅந்தப் பிரமுகர் அதைத் தெரிந்து கொண்டு சாமர்த்தியமாக லண்டனுக்குத் தப்பி விட்டார்.
இந்நிலையில் தான் தற்போது இந்த ராக்கெட் லாஞ்ச்சர் பறிமுதல் வழக்கில் அந்த காங்கிரஸ் பிரமுகரைப் போலீசார்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வியாபாரப் போட்டி காரணமாக இவர் தான் சிகாமணியைப் பற்றி போலீசாரிடம் "போட்டுக்" கொடுத்தாகவும்அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடிச் சோதனையின் போது தான் ராக்கெட் லாஞ்ச்சர் பறிமுதல்செய்யப்பட்டு, சிகாமணியும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள சிகாமணி போலீசார் விசாரணையின் போது காங்கிரஸ் பிரமுகரை பதிலுக்கு"போட்டுக்" கொடுத்ததால் தான், தற்போது அந்த காங்கிரஸ் பிரமுகரையும் வேறு இரண்டு பேரையும் போலீசார்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் பிரமுகரின் கூட்டாளிகளான இன்னும் இரண்டு பேரையும் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications