கோவையில் கோழி கழுத்தை திருகுவதுபோல்.. துப்பட்டாவை போட்டு கதையை முடித்த மனைவி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கோவை: மதுபழக்கம் எங்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது பாருங்கள்.. நிஜமாகவே சமூகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அக்கறை இருக்குமானால் மது பழக்கத்தை முறைப்படுத்த வேண்டும். சமூகத்தில் சாதிக்க வேண்டிய வயதில் உள்ள இளைஞர்கள், தினமும் மது அருந்துவதே சாதனை என்பது போல்போதைக்கு அடிமையாவதுடன், வாழ்க்கையின் எதிர்காலத்தை தொலைத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மதுப்பழக்கத்தால் கோவை அன்னூரில் ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது சொக்கம்பிள்ளை தெரு.. இந்த தெருவைச் சேர்ந்தவர் தறித் தொழிலாளியான 38 வயதாகும் ரமேஷ். இவருடைய மனைவி சசிப்பிரியா (38). இவர்கள் அன்னூர் அருகே மூக்கனூர் மாரியம்மன் கோவில் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

What did a wife do to her husband in Coimbatore when he asked for money to drink alcohol at a TASMAC shop

விசைத்தறி ஓட்டி வரும் ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதற்காக போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குடிப்பழக்கத்தை அவரால் நிறுத்த முடியவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சம்பவம் நடந்த அன்னு அதிகாலை 2 மணியளவில் வீட்டு திண்ணையில் அமர்ந்து ரமேஷ் மது குடித்தார். இதை அவரது மனைவி சசிப்பிரியா கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து காலை 11 மணியளவில் ரமேஷுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவரது சகோதரர் கார்த்திகேயனுக்கு சசிப்பிரியா தகவல் கொடுத்தார். உடனே அவர் வந்து பார்த்தபோது, வீட்டில் ரமேஷ் மயங்கி கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கார்த்திகேயன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின்பேரில் நேற்று சசிப்பிரியாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில் அவர் ரமேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் சசிப்பிரியா போலீசில் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று காலை 9 மணிக்கு நான் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தபோது ரமேஷ் மது குடிக்க பணம் கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ரமேஷ் ஆத்திரம் அடைந்து என்னை தாக்கினார். இதனால் வீட்டில் இருந்த துப்பட்டாவால் ரமேஷின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சசிப்பிரியாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இதுபோன்று மதுக்குடிக்க பணம் கேட்டு தாக்கும் கணவனை மனைவி திரும்பி தாக்கும் சம்பவங்கள் புதியது இல்லை.. பல சம்பவங்கள் நடந்துள்ளது. குடிப்போதையில் அடி தாங்க முடியாமல், குடித்து விட்டுசெய்யும் அட்டூழியம் தாங்காமலோ, பெண்கள் சில நேரங்களில் கணவனை கொன்றுவிட்டு சிறைக்கு போய்விடுகிறார்கள். குழந்தைகள் பெற்றோரை பிரிந்து அனாதையாக வசிக்கும் நிலை பல ஊர்களில் ஏற்படுகிறது.

அரசியல் கட்சிகளுக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், மதுவிற்பனையை நிறுத்த முடியாத என்றாலும், ஒருவர் எத்தனை மதுபாட்டில்கள் வேண்டுமானாலும் அருந்தலாம் என்பது ஆபத்தாக மாறுகிறது. மதுவிற்கு அடிமையானவர்கள், கண்டிபடி குடித்துவிட்டு வறுமையில் குடும்பங்களை தவிக்க விடுகிறார்கள். 60, 70 வயது வரை வாழ வேண்டியவர்கள், 35, 40 வயதில் உயிரிழந்து குடும்பங்களை தவிக்க விட்டு செல்கிறார்கள். அரசு நினைத்தால், இதற்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். அரசு தான் இதற்கு சரியான தீர்வை உருவாக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+