சம்பவ இடத்தை நெருங்கிட்டாங்க.. அதிமுகவுடன் ஐக்கியமாகும் அமமுக? எடப்பாடிக்கு பிரஷர் போடும் சீனியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்து பல தேர்தல்களில் படுதோல்வி, கட்சியில் இருந்து விலகும் முன்னாள் அமைச்சர்கள் என அதிமுக சிக்கலைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது டிடிவி தினகரனைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என சில நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திமுக அதிமுக கூட சேரலாம் என டிடிவி தினகரன் பேசியிருக்கும் நிலையில், அதிமுகவும் அமமுகவும் ஏன் சேர கூடாது என்பதுதான் அவர்களது கேள்வியாக இருக்கிறதாம்..

உண்மையிலேயே அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சி அமைத்த கட்சி, தனித்து களம் கண்டு ஆட்சியை தக்கவைத்த கட்சி என பல சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடும் அதிமுக, இன்று அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

Edappadi Palaniswami TTV Dhinakaran Sasikala

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என அடுத்தடுத்து பலர் விலகிய நிலையில் முக்கியமான சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் 2026 தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது.

அதிமுக

நிலையில் அதிமுகவின் முக்கியமான பல முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருக்கின்றனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் ஏன் தற்போது வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருக்க டிடிவி தினகரன் அதிமுகவுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார்.

டிடிவி தினகரன்

தமிழக வெற்றிக் கழகம் அதிமுக எம்எல்ஏக்களை களவாடுகிறது என டிடிவி தினகரன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தவெக கூட்டணி வைத்திருக்கும் நிலையில் ஏன் திமுக அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது என்ற கேள்வியை அவர் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது இந்திரலையில் திமுக அதிமுகவே இணையலாம் என பேசப்படும் நிலையில், அதிமுகவும் அமமுகவையும் இணைய கூடாது என்ற கேள்வி அதிமுக வட்டாரங்களில் முன்வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

சசிகலா

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சசிகலா பாமக கூட்டணி சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. முதுகுளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் சசிகலா ஆதரவு வேட்பாளர்கள் இரண்டாவது இடத்துக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி டிடிவி தினகரனுக்கும் சசிகலாவுக்கும் என பெரிய அளவில் இல்லை என்றாலும் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதம் இருக்கிறது. இதனால் அதிமுக அமுமுக இணைப்பு அவசியம் என சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிடம் வலியுறுத்தியுள்ளார்களாம்.

எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அமமுக வலுவாக இருக்கும் நிலையில் வாக்கு சிதறாமல் அதிமுகவின் இரட்டை இலைக்கே கிடைக்கும் மேலும் சசிகலாவையும் கட்சிக்குள் அழைத்து வரவேண்டும் என்கிறார்களாம். கட்சியை சசிகலா தினகரன் பார்த்துக் கொள்ளட்டும். ஆட்சியை நாம் பார்த்துக் கொள்ளலாம். அதற்கேற்றார் போல் ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளலாம் என சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்களாம். அதிமுக அமுமுக தற்போது கூட்டணியில் இருக்கும் நிலையில் கட்சி இணைப்பு அவசியம் இல்லை என டிடிவி தினகரன் சொல்லி வருகிறார்.

இடைத்தேர்தல்

அதே நேரத்தில் வெற்றி பெற்ற ஒரு எம்எல்ஏவும் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வரும் இடைத்தேர்தலில் நிற்க டிடிவி தினகரன் திட்டமிட்டு இருக்கிறார். அவரே நேரடியாக களமிறங்குவாரா? அல்லது கூட்டணி மூலம் தனது கட்சி வேட்பாளர்களை களம் இறக்குவாரா? என தெரியவில்லை. ஆனால் அதற்குள் அதிமுக அதிமுக இணைப்பு நடந்து விட்டால் சசிகலாவின் ஆசியோடு சில தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்பது அதிமுக சீனியர்களின் எண்ணமாக இருக்கிறது. அதற்கு எடப்பாடி ஒப்புக் கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+