CBSE 10th Results: சிபிஎஸ்சி எஸ்எஸ்எல்சி 2ம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு.. பார்ப்பது எப்படி?
சென்னை: சிபிஎஸ்இ 2026ம் ஆண்டிற்கான எஸ்எஸ்எல்சி இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை மாணவ-மாணவிகள் எப்படி பார்க்கலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அதன்படி மெயின் மற்றும் இரண்டாம்கட்ட பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் என்பது 96.78 சதவீதமாக உள்ளது. மாணவ - மாணவிகள் தங்களின் ரிசல்ட் முடிவுகளை டிஜிலாக்கர் ரிசல்ட்ஸ் போர்ட்டல் (DigiLocker Results Poral) பயன்படுத்தி பார்ககலாம்.

நடப்பு கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் தேர்வில் மதிப்பெண் குறைந்ததாக நினைக்கும் மாணவ-மாணவிகள் 2வது தேர்வில் பங்கேற்று மதிப்பெண்ணை அதிகரிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரை முதலாவது பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான ரிசல்ட் வெளியானது. இதையடுத்து 2ம் கட்ட பொதுத்தேர்வு 6 மே 15 முதல் மே 21 வரை நடத்தப்பட்டது. இந்த 2ம் கட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த ரிசல்ட்டை மாணவ - மாணவிகள் தங்களின் ரிசல்ட் முடிவுகளை டிஜிலாக்கடர் ரிசல்ட்ஸ் போர்ட்டல் (DigiLocker Results Poral) பயன்படுத்தி பார்ககலாம். அதன்படி மாணவர்கள் results.digilocker.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று டிஜிலாக்கர் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்லளாம்.
* அதன்படி மாணவ-மாணவிகள் முதலில் resuls.digilocker.gov.in எனும் இணையதளம் செல்ல வேண்டும்.
* ரோல் நம்பர், பள்ளியின் நம்பர்,ஹால்டிக்கெட் மற்றுமு் செக்யூரிட்டி எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
* அதன்பிறகு சப்மிட் செய்தால் போதும் மதிப்பெண்கள் ஸ்கிரினில் தோன்றும். அதன்பிறகு டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த 2வது கட்ட சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் மொத்தம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 027 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 6 லட்சத்து 63 ஆயிரத்து 777 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண்களை பெறும் வகையில் மட்டும் 5,13,955 மாணவ-மாணவிகள் தேர்வை எதிர்கொண்டனர். இதில் 3 லட்சத்து 08 ஆயிரத்து 095 மாணவ-மாணவிகள் தங்களின் முந்தைய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதன்படி பார்த்தால் ரேத்வு எழுதியவர்களில் 59.95 சதவீதம் பேர் மதிப்பெண்களை உயர்த்தி உள்ளனர்.
அதேபோல் கம்பார்ட்மென்ட் (மறுதேர்வு) பிரிவில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 822 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 78,503 பேர் பாஸாகி உள்ளனர். அதன்படி பார்த்தால் மறுதேர்வில் பாஸ் சதவீதம் 52.40 சதவீதமாக உள்ளது. இது முந்தைய 2025ம் ஆண்டில் நடந்த மறுதேர்வை ஒப்பிடும்போது பாஸ் சதவீதம் அதிகமாகும். கடந்த 2025ம் ஆண்டில் பாஸ் சதவீதம் 48.68 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 52.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு மற்றும் இரண்டாம்கட்ட பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் என்பது 96.78 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications