கோவையில் சாதிய பாகுபாடு.. நேரடியாக தலையிட்ட வன்னி அரசு! இந்த மாற்றத்தை யாரும் எதிர்பார்க்கலியே!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: சாதிய பாகுபாடு காரணமாக கோவை கெம்பனூர் பகுதியில், பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்று தொடர் புகார்கள் வந்திருந்தன. இதையடுத்து இந்த பகுதிக்கு பேருந்துகளை இயக்க சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று வன்னி அரசு இந்த பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிதான் கெம்பனூர். இங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வாழும் அதே எண்ணிக்கையில் பட்டியல் சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

Vanni Arasu

இந்த பகுதிக்கு 21 மற்றும் 21b என இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் கெம்பனூரை தாண்டி, 500 மீ தொலைவில் உள்ள பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் அண்ணா நகர் பகுதி வரை செல்ல வேண்டும். ஆனால், அண்ணா நகர் வரை பேருந்து போய் திரும்பும்போது, அங்கிருந்து அதிகமான ஆட்கள் ஏறிக்கொள்கிறார்கள்.. பட்டியல் மக்கள் ஏறி பின்னர் தங்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்று சொல்லி, சைஸாக இந்த பேருந்த கெம்பனூர் வரை மற்ற சமூகத்தினர் நிறுத்தி வைத்திருந்தனர்.

இதனால் அண்ணா நகர் மக்கள் 500 மீ வரை வந்து பஸ் ஏற வேண்டிய நிலைக்கு உள்ளாகினர். இரவு நேரங்களில் பேருந்து கெம்பனூரோடு நின்றுவிடுவதால், இருட்டில் பெண்களும், முதியவர்களும் 500 மீ வரை நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. எனவே பேருந்தை அசல் வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தியிருந்தனர். போராட்டத்தின் விளைவாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வும் மேற்கொண்டனர். ஆனால், வழக்கம் போல பேருந்து கெம்பனூர் வரை மட்டுமே வந்தது.

இப்படி இருக்கையில் இந்த விவகாரம் சமூகநீதி நலத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் வன்னி அரசு இது குறித்து உரிய ஆய்வு நடத்தி.. பேருந்தை அசல் வழித்தடத்தில் இயக்க கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று இந்த பேருந்தில் அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத் குமார் இருவரும் அண்ணா நகர் வரை பயணித்திருந்தனர். பின்னர் அண்ணா நகர் பகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். இந்த பயணத்தில் அண்ணா நகர் மக்கள் அமைச்சர்களுக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தனர்.

பல ஆண்டுகால போராட்டம், அமைச்சரின் ஒரே உத்தரவில் சட்டென நிறைவேறிவிட்டதே என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+