மேயர் பிரியாவுக்கு ஸ்கெட்ச்? சென்னை மாநகராட்சியில் 7 பேர் பணியிடை நீக்கம்! அடித்து ஆடும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை மாநகராட்சியில் அதிரடி ரெய்டை மேற்கொண்டிருந்தது. இதை தொடர்ந்து தற்போது 7 அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இது மேயர் பிரியாவுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது.

என்னதான் சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா இருந்தாலும், நிர்வாக கட்டுப்பாட்டை முழுமையாக தன் வசம் எடுக்க தவெக அரசு முயன்று வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ரெய்டு, சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Mayor Priya

என்ன நடந்தது?

தவெக அரசு புதியதாக பொறுப்பேற்றவுடன், லஞ்சம் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டியது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு நடத்தியிருந்தது. இந்த ரெய்டில் ஏராளமான பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பணிகளுக்கு லஞ்சம் வாங்குதல், போலி பில்கள் மூலம் முறைகேடு செய்தல், வேலைக்கு லஞ்சம் வாங்குதல்.. என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

சஸ்பெண்ட் நடவடிக்கை

இதை தொடர்ந்து, தற்போது ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களை சேர்ந்த 7 அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். இவர்களில் சுகாதார அதிகாரி தேவிகலா, உதவி செயற்பொறியாளர் ஆனந்த் ராவ் உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதவி செய்ய மாநகராட்சி ஆணையர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த உத்தரவுதான் மேயர் பிரிவுக்கு செக் வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மேயர் பிரியாவுக்கு சவால்

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை திமுகதான் இங்கு வெயிட். அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள்தான் அதிகம். எனவே மேயரின் ஆதிக்கம்தான் மாநகராட்சிக்குள் இருந்து வந்தது. இப்படி இருக்கையில், ஆணையரின் உத்தரவு மேயரின் அதிகாரிகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது. என்னதான் மேயர் அதிக அதிகாரங்களை கொண்டிருந்தாலும், நிர்வாகம் ஆணையரின் பிடியில்தான் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அடித்து ஆடும் தவெக

முன்னதாக கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தது. இத்துடன் நிற்காமல் ரூ.700 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களையும் தள்ளுபடி செய்திருந்தது. இதை தொடர்ந்து ரெய்டு மற்றும் சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சிக்குள் மேயர் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+