ட்விஸ்ட் வைத்த வைகோ! ஒரே மேடையில் திருமாவளவன், அன்புமணி! ஆக.4ம் தேதி சம்பவம் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆக்.4ம் தேதி தான் எழுதிய நூலை வெளியிடுகிறார். இந்த நூலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட, முதல்வர் விஜய் பெற்றுக்கொள்கிறார். இந்த வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழில் திருமாவளவன் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.

ஏற்கெனவே தவெக கூட்டணியில் இணைய அன்புமணி ராமதாஸ் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த இணைப்புக்கு அச்சாரம் போடும் நிகழ்வாக நூல் வெளியிட்டு விழா அமைய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Vaiko

புத்தக வெளியீட்டு விழா

வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய புதிய புத்தகம், டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா அரங்கில் ஆக.4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் வைகோ பேசிய உரைகள் 'Vaiko in parliamnet' என்கிற பெயரில் 6 பாகங்களாக ஆங்கிலத்தில் வெளியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் சாபநாயகர் ஜெகதீப் தன்கர், சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ(CPI) பொதுச்செயலாளர் டி.ராஜா என பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரே மேடையில்

இந்த நிகழ்வில் பங்கேற்க அன்புமணி ராமதாஸுக்கும், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுதான் கவனம் பெற்றிருக்கிறது. தவெக கூட்டணியில் தற்போது விசிக இடம் பெற்றிருக்கிறது. விசிகவை பக்கத்தில் வைத்துக்கொள்வது என்பது, சமூக பிரிதிநிதித்துவத்தை அரசு கடைபிடிக்கிறது என்பதற்கான அடையாளம். இருப்பினும், ஆதி திராவிடர் சமூகத்தினரின் வாக்குகள் போதுமான அளவுக்கு விஜய் பக்கம் இருக்கிறது.

வன்னியர் வாக்குகள்

இப்போது தேவையெல்லாம் வன்னியர் சமூகத்தினரின் வாக்குகள்தான். பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இந்த வாக்கு வங்கியை கவர வேண்டும் எனில், தவெக கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவருவது அவசியம். ஆனால், விசிக உள்ளே இருக்கும் வரை அது கொஞ்சம் கஷ்டம்தான். எனவே இதற்கான வழியை மதிமுக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி மூலம் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கூட்டணிக்குள் வரும் பாமக

இப்படியான நிகழ்ச்சிகள் மூலம் திருமாவளவனும், அன்புமணியும் ஒன்றாக பங்கேற்கும்போது.. அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இந்த சந்திப்பு இயல்பானதாக மாறிவிடும். இப்படியே பாமகவை தவெக கூட்டணியில் இணைத்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+