தாண்டவமாடும் ஈரான்.. ஜோர்டான் ‘அட்டாக்'கில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.. ஒருவர் மிஸ்ஸிங்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஜோர்டான் நாட்டின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலில் ஜோர்டான் நாட்டில் இருந்த 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதோடு, ஒருவர் மாயமாகி உள்ளார். இதனால் அமெரிக்கா கடும் கோபமடைந்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானலும் கூட தற்போது மோதல் நடந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்கி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள அண்டை நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

iran-attacks-on-jordan-2-us-soldiers-killed-and-one-missing

அந்த வகையில் நேற்றைய தினம் ஈரான் சார்பில் ஜோர்டான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு அமெரிக்காவின் படை வீரர்கள் உள்ளனர். இதனால் ஜோர்டானை நோக்கி வரும் ஏவுகணை, ட்ரோன்களை வானிலேயே அழிக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது 2 அமெரிக்க ராணுவ வீரர்கள்பியாகினர். ஒருவர் மாயமாகி உள்ளார். அவரது நிலை என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் ஈரான் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் 2 ராணுவ வீரர்கள் பலியானதை CENTCOM உறுதி செய்துள்ளது. இந்த CENTCOM என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் கட்டுப்பாட்டு மையமாகும். இங்கிருந்து தான் ஈரான் உள்பட மத்திய கிழக்கு நாடுகள் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலம் அமெரிக்க ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து தொடங்கியது. இதுவரை மொத்தம் 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியான நிலையில் நேற்று 2 பேர் இறந்துள்ளனர். இவர்கள் தவிர 430க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+