சட்டசபை கூட்டம் தொடங்கியது: கருணாநிதி வந்தார்... சென்றார்
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சமீபத்தில் மறைந்த தலைவர்களுக்குஅஞ்சலி செலுத்திய பின்னர் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்களான பி.டி. ஜாட்டிமற்றும் கிருஷ்ணகாந்த் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் நாளை வரை தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத் தொடர் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
கருணாநிதி வந்தார்... கையெழுத்திட்டார்... சென்றார்
முன்னதாக திமுக தலைவர் இன்று காலை சட்டசபைக்கு வந்தார். வந்தவுடன் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில்கையெழுத்து போட்டார்.
அதன் பிறகு சிறிது நேரம் சட்டசபையின் லாபியிலேயே உட்கார்ந்திருந்தார். பின்னர் கூட்டம் தொடங்குவதற்குமுன் வழக்கம் போல அதில் கலந்து கொள்ளாமலேயே சென்று விட்டார்.
இந்த சட்டசபையின் முதல் கூட்டத் தொடரிலும், பிறகு இன்னொரு கூட்டத் தொடரிலும் மட்டுமே கருணாநிதிகலந்து கொண்டார். அதுவும் இரு நாட்கள் மட்டுமே பங்கேற்றார்.
அதன் பிறகு சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
தக்க பாதுகாப்பு வழங்கப்படும், எந்தவித கசப்பான நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு தரப்படமாட்டாது என்று சபாநாயகர்காளிமுத்து பலமுறை கூறியும் கூட சபைக்கு வருவதை கருணாநிதி தவிர்த்து வருகிறார்.
தொடர்ந்து மூன்று கூட்டத் தொடர்களில் கலந்து கொள்ளாவிட்டால் எம்.எல்.ஏ. பதவி பறிபோய் விடும் என்ற விதிஇருப்பதால் அவ்வப்போது கருணாநிதி சட்டசபைக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டு விட்டுச் செல்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications