சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற முடியாத கர்நாடக அரசு விலகி விடலாம்: நீதிபதிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்று பேசிய கர்நாடக அரசு ஆட்சியை விட்டுவிலகி விடலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கோரி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு ஏற்க மறுத்தது. குடிபோதையில்விவசாயி இறந்தது, மண்டியா, மைசூரில் விவசாயிகள் நடத்திய போராட்டம், கன்னட வெறியர்கள் போராட்டம் ஆகியவற்றைக்காரணமாகக் காட்டி தமிழகத்துக்கு நீர் விட கர்நாடகம் மறுத்தது.

இதை எதிர்த்து தமிழகம் இரு முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த இரு அவமதிப்பு வழக்குகளின்விசாரணையும் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கிர்பால், நீதிபதி சபர்வால், நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்இதனை விசாரித்தது.

அப்போது பேசிய நீதிபதி கிர்பால், ஒரு மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டுதன்னிச்சையாக செயல்படுகிறது. கேட்டால் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்று வீம்பு பேசுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவையே ஒரு மாநில அரசு மதிக்காவிட்டால் இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

அயோத்தி விஷயத்திலும் இதே போலத்தான் அந்த மாநில அரசு நடந்து கொண்டது. உச்ச நீதிமன்றத்திடம் பாபர் மசூதியைபாதுகாப்போம் எனறு உறுதியளித்த முதல்வர் அதை பின்னர் இடிக்க விட்டு வேடிக்கை பார்த்தார்.

மக்களை தூண்டிவிட்டுவிட்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்று மாநில அரசுகள் சொல்வதுதுரதிஷ்டவசமானது.

நீரைத் திறந்துவிட்டால் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிடும் என்று பேசுகிறார் கர்நாடக வழக்கறிஞர். சட்டம் ஒழுங்கை பராமரிக்கமுடியாத அரசு ஆட்சியைவிட்டுப் போய்விட வேண்டியது தானே?

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தூக்கி குப்பையில் போடுவீர்களா? நீதிமன்ற உத்தரவைஎதிர்த்தால் அரசியல் லாபம் கிடைக்கும் என்பதற்காக திட்டமிட்டே இந்தச் செயலை செய்துள்ளது கர்நாடக அரசு. இந்தப்பிரச்சனையை உருவாக்கியதே கர்நாடகம் தான்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்லும் உத்தரவை ஒரு மாநிலஅமலாக்க மறுக்கிறது. அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்துக்கு மத்திய அரசு எந்தவகையிலாவது அறிவுரை தந்ததா?

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு அமலாக்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் ஏற்க மறுப்பதால் அரசியல் சட்டம் 256வதுபிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசின் மூலமாக இந்த உத்தரவை அமலாக்குவது குறித்து நாங்கள் யோசிப்போம்.

இடையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் அனில் தவான் தலையிட்டு, தண்ணீர் விட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கிளம்பும்என்றார். அப்போது பேசிய தலைமை நீதிபதி, இப்படி சட்டம் ஒழுங்கை கையாள முடியாத ஒரு அரசு ஆட்சியில் இருந்து தான் ஆகவேண்டுமா? பேசாமல் விலகிவிட வேண்டியது தானே என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உங்களால் நீர் விட முடியாது என்றால் அதை நீதிமன்றத்திடம் வந்து தெரிவிக்க வேண்டியது தானே.அதைவிட்டுவிட்டு எதற்காக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பாத யாத்திரை நடத்தினார்?. நீர் விட மாட்டோம் என்று எதற்காகஎல்லா கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு தீர்மானம் போட வேண்டும். நீதிமன்றத்தை திட்டமிட்டு அவமதிக்கவா?

அயோத்தி விவகாரத்தில் இதே போலத் தான் நடந்தது. இப்போது இன்னொரு முதல்வரும் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கிறார்.இதனால் தான் இந்த விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். அரசியல் சட்டத்தின் 144வது பிரிவின் படிஉச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரிகளும், அரசுகளும் உதவியாக இருக்க வேண்டும். ஆனால், அந்தச் சட்டத்தையே மதிக்காமல்இருந்தால் எப்படி?

எங்களைப் பொறுத்தவரை கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை திட்டமிட்டு அவமதித்துள்ளது என்றனர் நீதிபதிகள்.

அப்போது தலையிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே, நீதிபதிகள் எங்களுக்கு என்னஉத்தரவிட்டாலும் அதை நாங்கள் அமலாக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

முன்னதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வேணுகோபால் பேசுகையில்,

கர்நாடகத்தின் செயலால் அரசியல் சட்டச் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. கர்நாடகம் நீர் தராததால் எங்களுக்கு ரூ. 2,900 கோடிஅளவுக்கு பெரும் பொருள் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டை கர்நாடகம் தர வேண்டும்.

அது மட்டுமல்ல, நீதிமன்றத்தை மீறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் விடத் தவறும் நாள்தோறும்தமிழகத்துக்கு அதற்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று பிற்பகலிலும் தொடர்ந்து நடக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

பிற்பகலில் விசாரணையைத் தொடர்ந்த நீதிபதிகள், உடனே முதலில் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட வேண்டும் எனகர்நாடகத்துக்கு உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தை கர்நாடகம் திட்டமிட்டு அவமதித்துள்ளது. விசாரணைகளை முழுமையாக முடித்துக் கொண்டு வரும்செவ்வாய்க்கிழமை கர்நாடகம் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்படும்.

அதே நேரத்தில் வரும் திங்கள்கிழமைக்குள் கர்நாடகம் தனது பதிலை அளிக்கவும் அவகாசம் தருகிறோம். இப்போதுடெல்லியில் இருக்கும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் அம் மாநில வழக்கறிஞர் பேசி இந்த விவகாரத்தில் ஏதாவது சமரசம்காணவும் முயலலாம்.

எந்த மாதிரியான சமரசத் திட்டத்தை கர்நாடகம் உருவாக்குகிறது என்பதை எங்களுக்கு திங்கள்கிழமை சொல்ல வேண்டும்.அதன் பிறகு செவ்வாய்க்கிழமை இந்த அவமதிப்பு வழக்கில் எங்கள் தீர்ப்பை வழங்குவோம்.

தமிழகத்துக்கு உடனே தண்ணீரை விட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு விசாரணை இன்று காலை முதல் பிற்பகல் வரை சுமார் 5 மணி நேரம் இன்று நடந்தது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+