பெங்களூரில் பதற்றம்: உஷார் நிலையில் போலீசார்
பெங்களூர்:
காவிரியில் நீர் விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெங்களூரிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூரிலும் போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ரோந்தை அதிகமாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிலைமையை ஆராயந்த பின்னர் அதற்கேற்பதமிழக- பெங்களூர் பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துக்குக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 3 வாரங்களாக பெங்களூர் உள்பட கர்நாடகம் முழுவதும் தமிழக சேனல்களுக்கு கன்னட வெறியர்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்ணைக் கட்டிவிட்ட நிலையில் தமிழர்கள்உள்ளனர்.
தமிழ் சினிமாவுக்கும் தடை தொடர்கிறது. இந் நிலையில் கர்நாடகத்துக்கு எதிராகவும் தமிழகத்துக்கு ஆதரவாகவும் தீர்ப்புவந்துள்ளதால் பெங்களூரில் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
தமிழ் சானல் ஒளிபரப்பு: நீதிமன்றம் தள்ளுபடி
இதற்கிடையே, நேற்று கர்நாடகத்தில் தமிழ் சேனல்களை ஒளிபரபப்பக் கோரி தமிழ் கிருஸ்துவ நலச் சங்கம் வழக்குத் தாக்கல்செய்துவிட்டு அதைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த மனுவை பெங்களூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
கடந்த 5ம் தேதி முதல் கர்நாடகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும், தமிழ் படங்களைமீண்டும் திரையிட வேண்டும் என்று கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை கிருஸ்துவ சங்கம் தாக்கல் செய்தது.
இந்த மனுவின் விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது கிருஸ்துவ நலச் சங்கத்தின் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் இந்த மனுவை விசாரணைக்கு முன்பே தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
வழக்கை தாக்கல் செய்த அமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாகத் தெரிகிறது.மீண்டும் இந்த வழக்கு விரைவில் தாக்கலாகலாம் என்று தெரிகிறது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications