கிருஸ்தவ, முஸ்லீம் பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத மாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிராக வியாழக்கிழமை கல்வி நிறுவனங்களை மூடிய சிறுபான்மை கல்விநிறுவனங்களை நடத்தும் அமைப்புகளுக்கு தமிழக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தைக் கண்டித்து சிறுபான்மை அமைப்புகள் வியாழக்கிழமை சென்னையில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. அன்றைய தினம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறுபான்மைஅமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

ஆனால், இதற்கு இதற்கு அரசு அனுமதி தரவில்லை, சென்னை உயர்நீதிமன்றமும் கல்வி நிறுவனங்களை மூடசட்டத்தில் இடமில்லை என்று கருத்து தெரிவித்திருந்தது.

ஆனாலும் மாநிலத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையினர் கல்வி நிலையங்களும் வியாழக்கிழமை மூடப்பட்டன.

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே கல்வி நிலையங்கள் மூடப்பட்டதாகவும் மாணவர்களைபோராட்டத்துக்கு இழுப்பதற்காக அதைச் செய்யவில்லை என்றும் சிறுபான்மை அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இந் நிலையில், அரசு அனுமதி தராத நிலையில் கல்வி நிலையங்களை மூடியது ஏன், இதற்காக உங்களது கல்விநிறுவனங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தமிழக அரசு சுமார் 3,000 பள்ளிகளுக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு வாரத்தில் பதில் அளிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த நோட்டீஸில்கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, மெட்ரிகுலேஷன் கல்வி மற்றும் ஆரம்பக் கல்வித்துறை சார்பில் இந்தநோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+