டெல்லியில் அவசரமாய் தரையிறங்கிய சிங்கப்பூர்- லண்டன் விமானம்
டெல்லி:
சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று நள்ளிரவு டெல்லி விமான நிலையத்தில்அவசரமாகக் தரையிறங்கியது.
இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்-061 விமானம் நள்ளிரவில் இந்தியாவின் மீது பறந்து கொண்டிருந்தபோது ஒரு சீட்டில் மர்ம பை கிடந்தது.இதையடுத்து அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்று கருதிய விமான சிப்பந்திகள் உடனே பைலட்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த விமானத்தை டெல்லியில் விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் அனுமதி கோரினர். இதைத் தொடர்ந்துஉடனடியாக அனுமதி தரப்பட்டது. ரன்வே அருகே தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டனர்.
டெல்லி போலீசில் வெடிகுண்டு நிபுணர்களும் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்தனர். மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இந்தவிமானம் நள்ளிரவு 1.57 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கியவுடன் பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டனர். இதையடுத்து அந்த விமானம் தனி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
டெல்லி போலீசாரும், விமான நிலையப் பாதுகாப்புப் படையினரும் விமானத்துக்குள் சென்று அந்தப் பையை விமானத்தில் இருந்துவெளியே கொண்டு வந்தனர்.
ஆனால், அந்தப் பையை சோதனையிட்டபோது அதில் டூத் பேஸ்ட், டூத் பிரஷ் மற்றும் சோப் இருந்தது. அது பிரிட்டிஷ் ஏர்வேஸ்நிறுவனத்துக்கு சொந்தமான டாய்லட் பேக் என்று தெரியவந்தது.
இருந்தாலும் தரையிறக்கப்பட்ட விமானம் முழுவதும் தீவிர சோதனை நடந்தது. பயணிகள் அனைவரும் 2 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வேறு விமான ஊழியர்களைக் கொண்டு இந்த விமானம் இன்று மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் தனது லண்டன் பயணத்தைத் தொடரும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications