இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக என்.சி. விஜ் நியமனம்
டெல்லி:
இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக லெப்டினண்ட் ஜெனரல் நிர்மல் சந்த் விஜ் நியமிக்கப்பட உள்ளார்,
இப்போதைய தளபதியான ஜெனரல் பத்மநாபன் வரும் டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து லெப்டினண்ட் ஜெனரல் இப்பதவியில் அமர்த்தப்படுவார்.
ஜம்மூவைச் சேர்ந்த விஜ், டோக்ரா ரெஜிமெண்ட் எனப்படும் ராணுவப் பிரிவில் சேர்ந்து தனது சேவையைத் துவக்கியவர். கார்கில்போரின்போது இவர் ராணுவத்தின் ஆபரேசன்ஸ் பிரிவுக்கு டைரக்டர் ஜெனரலாக இருந்து பெரும் சேவையாற்றினார். இதனால் உத்தம் யுத்சேவா விருது பெற்றார்.
இவை தவிர பரம் விஷிஸ்ட் சேவா, அதி விஷிஸ்ட் சேவா விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
ராணுவத்தின் ஸ்ட்ரைக்கிங் கார்ப்ஸ் எனப்படும் தாக்குதல் படைக்கும், ஆண்டி-இன்சர்ஜென்சி எனப்படும் தீவிரவாதிகள் எதிர்ப்புப்படைக்கும் தலைவராக இருந்த ஒரே மூத்த அதிகாரி இவர் தான்.
கடந்த 40 ஆண்டுகளாக ராணுவத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய பெருமை வாய்ந்தவர். 2000ம் ஆண்டில் இவர் தென் இந்தியராணுவப் பிரிவின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இவரது தலைமையில் தான் ராணுவம் மீட்புப்பணி நடந்தது.
பின்னர் கடந்த அக்டோபரின் ராணுவத்தின் துணைத் தலைவரானார்.
ஓய்வு பெற உள்ள ராணுவத் தளபதி பத்மநாபன் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications