அமைதி பேச்சு: சந்திரிகாவின் ஆலோசகர் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை செல்லும் போக்கு திருப்திகரமாக இருப்பதாக இலங்கை அதிபர் சந்திரிகாவின்அரசியல் ஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்திருந்த கதிர்காமர்சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தாய்லாந்தில் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக உள்ளன. 2-வது சுற்றின் இறுதியில்ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப விரும்புதாக புலிகள் கூறியுள்ளதை வரவேற்கிறோம். இது சந்தோஷம் தரும்செய்தியாக உள்ளது.
இருப்பினும் அடுத்த கட்டமாக எந்தவிதமான முன்னேற்றம் ஏற்படப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும். விடுதலைப் புலிகள் தாங்கள் சொல்வதை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து பல முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறார் சந்திரிகா என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications