அமெரிக்க விருது பெறும் இந்தியப் பெண்
நியூயார்க்:
உரிமைகளை நிலைநிறுத்தப் போராடியதற்காக இந்தியர் உள்பட 3 பேருக்கு உலக உரிமைப் பாதுகாவலர்கள் விருதுவழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு இந்த மூவரையும்தேர்ந்தெடுத்துள்ளது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மீனா சரஸ்வதி சேசு என்பவர் இந்த விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியராவார். இவர் எய்ட்ஸ்நோயாளிகளிடையே இணைந்து பணியாற்றி அந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதில் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.இதற்காக சங்க்ரம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
போலீசாரின் கொடுமைகள் மற்றும் அப் பகுதி புரோக்கர்களின் கடும் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் எய்ட்ஸ் நோயைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்தார். இவரை சிவசேனைத் தொண்டர்கள் பலமுறை தாக்கியுள்ளனர். ஆனாலும் தனதுவேலையை அவர் தொடர்ந்து கொண்டுள்ளார்.
அதே போல சாட் நாட்டின் சர்வாதிகாரி ஹிஸ்னே ஹாப்ரேயை எதிர்த்துப் போராடிய அந் நாட்டின் அதிகாரியான சுலைமானேகுயேங்கெங் இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபரின் கொடூரங்களை உள்ளடக்கிய கோப்புகளைவெளியுலகுக்குக் கொண்டு வந்து காட்டினார். இதற்காக அவரை 2 ஆண்டுகள் அதிபரின் ஆட்கள் சிறை வைத்துகொடுமைப்படுத்தினர்.
அதே போல துருக்கியில் குர்த் இன மக்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளை கண்டித்துப் போராடி வரும் சனார்யுர்ததபன் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். அரசினால் தடை செய்யப்பட்ட புத்தகங்களை வெளியிட்டும், குர்த் இனத்தினருக்குஎதிரான அரசின் கொடுமைகளை வெளியுலகுக்குத் தெரிய வைத்தும் போராடியவர் இவர்.
வரும் 21ம் தேதி நியூயார்க்கில் த மார்க் ஹாப்கின்ஸ் ஹோட்டலில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த மூவருக்கும் 2002ம்ஆண்டுக்கான உரிமை பாதுகாவலர்கள் விருது வழங்கப்பட உள்ளது.
இவர்கள் தங்கள் நாடுகளில் பல்வேறு தொல்லைகள், ஆபத்துகளுக்கு மத்தியிலும் மக்களின் உரிமைகளைக் காப்பாற்றபபோராடியதால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் அமைப்பின் இயக்குனர் கென்னத் ரோத் தெரிவித்தார்.
விருது பெறும் இந்தியரான மீனாவை [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
-->
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications