காட்டுக்குள் சென்று வீரப்பனை ரகசியமாக சந்தித்த மகாதேவசாமி
பெங்களூர்:
கொள்ளேகால் பகுதி ஐக்கிய ஜனதா தளத் தலைவரான பொன்னாச்சி மகாதேவசாமி காட்டுக்குள் ரகசியமாகச்சென்று சந்தனக் கடத்தல் வீரப்பனை 2 முறை சந்தித்து விட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவரான கொளத்தூர் மணியையும்மகாதேவசாமியையும் தான் காட்டுக்குள் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் கேசட்டில்கூறியிருந்தான்.
ஆனால் கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் அவரைத் தூதராக அனுப்பவே வாய்ப்பில்லை என்றுகர்நாடக அரசு உறுதியுடன் கூறிவிட்டது. வேறு யாரையாவது தூதராக அனுப்பலாம் என்பது குறித்தும் கர்நாடகஅரசு யோசித்து வருகிறது.
இதற்கிடையே மகாதேவசாமி யாருக்குமே தெரியாமல் காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்து விட்டுவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்த விவரம்:
மகாதேவசாமியுடன் கங்காதரசாமி மற்றும் நாகேந்திரா ஆகியோரும் காட்டுக்குள் சென்றனர். அவர்கள்மூவரிடமும் ஏதாவுது ஆயுதங்கள் உள்ளனவா என்று கடுமையாகச் சோதனை செய்த பின்னரே அவர்களைசந்தித்து வீரப்பன் பேசியுள்ளான்.
வீரப்பன் தங்கியிருந்த முகாமிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் காட்டுக்குள்ளேயே மற்றொரு இடத்தில்அவனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா வைக்கப்பட்டிருந்தார்.
நாகப்பாவை சந்திப்பதற்கும் வீரப்பன் மகாதேவசாமிக்கு அனுமதி அளித்தான். இதையடுத்து நாகப்பாவைமகாதேவசாமி சந்தித்தார். நாகப்பா மிகவும் மெலிந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நாகப்பாவுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை அப்போது மகாதேவசாமி வழங்கியுள்ளார். மேலும் சிலதுணிகள், பகவத் கீதை புத்தகம், நோட்டு, பேனா போன்றவையும் நாகப்பாவுக்கு வழங்கப்பட்டன.
பின்னர் மகாதேவசாமியிடம் பேசிய வீரப்பன், கொளத்தூர் மணியை விரைவில் தூதராக அனுப்ப வேண்டும்என்றும் தன்னுடைய சில கோரிக்கைகளை அவர் மூலமாகத் தான் கர்நாடக அரசுக்கு அனுப்புவேன் என்றும்கூறியுள்ளான்.
இந்தச் சந்திப்பு நடந்த சில நாட்களில் மீண்டும் காட்டுக்குள் சென்றார் மகாதேவசாமி. அப்போது நாகப்பாவைஅவர் சந்திப்பதற்கு வீரப்பன் அனுமதி கொடுக்கவில்லை.
மேலும், இனிமேல் கொளத்தூர் மணி இல்லாமல் காட்டுக்குள் காலடி வைக்காதே என்று மகாதேவசாமியிடம்கண்டிப்புடன் கூறிவிட்டானாம். வீரப்பன் அப்போது கடும் கோபத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவரங்கள் அனைத்தும் எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதற்கிடையே மகாதேவசாமியுடன் முதல் முறை காட்டுக்குள் சென்ற கங்காதரசாமி மற்றும் நாகேந்திராஆகியோரை கர்நாடக அதிரடிப்படையினர் பிடித்து, வீரப்பன் மற்றும் நாகப்பா ஆகியோரின் இருப்பிடம் குறித்துதீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications