வேல்ஸ் பல்கலையில் சட்டப் படிப்பில் முதல் வகுப்பு பெற்ற கோவை தமிழர்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜய்சந்த் வெற்றிச்செல்வம் என்பவர் இங்கிலாந்தின் கார்டிப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று முதல் வகுப்பில் தேறி சாதனை படைத்துள்ளார்.

கோயம்புத்தூர் அருகே உள்ள கெட்டி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் தான் வெற்றிச்செல்வம்.

இவர் வேல்ஸ் நகரில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் இளம்கலைப் பட்டத்திற்கான சட்டப் படிப்பு படித்துவந்தார்.

இந்நிலையில் இந்தப் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தியாவிலேயே இந்தப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள முதல் மாணவர் வெற்றிச்செல்வம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பில் சேரவுள்ளார் வெற்றிச்செல்வம்.

அதன் பிறகு லண்டனிலேயே வக்கீலாகப் பணிபுரியவும் வெற்றிச்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து கார்டிப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு படிப்புகளுக்காக 250 இந்தியமாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவிலிருந்து தான் அதிக அளவில் மாணவர்கள் இங்கு படித்து வருகிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+