மிக் 21 விமானம் நொறுங்கி 2 பைலட்டுகள் பலி
பாக்தோக்ரா:
மேற்கு வங்காள மாநிலத்தில் மிக் 21 ரக போர் விமானம் ஒன்று இன்று காலை நொறுங்கி விழுந்ததில் அதிலிருந்த 2பைலட்டுகளும் பலியாகி விட்டனர்.
பயிற்சி விமானமான இது இன்று காலை 7.30 மணிக்கு வழக்கம் போல பயிற்சிக்காக கிளம்பிச் சென்றது.
வானில் சுமார் 20 நிமிடங்கள் வரை பறந்து கொண்டிருந்த இந்த விமானம் தரையிறங்கும் போது அதில் சிலதொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவ்விமானத்திலிருந்த இரண்டு பைலட்டுகளும் பாராசூட் மூலம் தப்பிக்க முயற்சித்தனர்.
ஆனால் அதற்குள் விமானம் அருகில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிவிட்டது. இதில் அந்த இரு பைலட்டுகளுமே உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விமானப் படை அதிகாரிகளும், போலீசாரும், மீட்புப் படையினரும் விரைந்து,அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர்.
சமீப காலத்தில் மிக் ரக விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுவது தொடர்கதையாகி விட்டது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications