மருத்துவமனையை ஆட்டிப்படைக்கும் பாம்பு படை
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால்அங்கு பாம்பாட்டிகளை வைத்து பாம்பு பிடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது அரசு.
ஸ்ரீபுரம் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் புதர்கள் அதிக அளவில்உள்ளன. இதைத் தொடர்ந்து பாம்புகள் படையெடுக்க ஆரம்பித்தன.
ஒன்று, இரண்டாக உலவி வந்த பாம்புகள், நாளடைவில் படை படையாக வர ஆரம்பித்துவிட்டன. இதனால்மருத்துவமனைக்கு வரும் பிற மிருகங்கள் தலைதெறிக்க ஓடுகின்றன. கால்நடை மருத்துவமனை ஊழியர்களேஉள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பல கால்நடைகள் பாம்பு கடிக்கு பலியாகி வருகின்றன. இதைத்தொடர்ந்து போலீஸிலும் வனத்துறையினரிடமும் கால்நடைத்துறை புகார் தந்து உதவி கோரியுள்ளது.
இதையடுத்து பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளது வனத்துறையினர். கைதேர்ந்த பாம்பாட்டிகள் சிலரைப் "பிடித்து",அவர்களிடம் பாம்புகளைப் பிடிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மகுடிளுடன், கால்நடை வளாகத்திற்குள் நுழைந்துள்ள பாம்பாட்டிகள், பாம்பு வேட்டையைத்தொடங்கியுள்ளனர். இதுவரை 15 பெரிய பாம்புகளையும் நூற்றுக்கணக்கான சிறிய பாம்புகளையும்பிடித்துள்ளனர்.
அதற்கு மேல் அங்கு பாம்புகள் இல்லை என பாம்பாட்டிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது வந்துதேடுதல் வேட்டையைத் தொடருமாறு அவர்களுக்கு வனத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
பிடிபட்ட பாம்புகளில் கருநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் நல்லபாம்பு போன்ற மிக பயங்கரவிஷம் கொண்ட பாம்புகள் இருந்தன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications