சென்னை நீதிமன்றத்தில் ஜி.கே. மணி சரண்: டிசம்பர் 5 வரை நீதிமன்றக் காவல்
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளையின் நிர்வாகிகளைத் தாக்கிய வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பா.ம.க.தலைவர் ஜி.கே. மணி இன்று சென்னையில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சென்னையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையை நிர்வகிக்க நீதிபதியொருவர் தலைமையில்இடைக்கால நிர்வாகக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.
ஆனால், இக்குழுவினரைப் பதவியேற்க விடாமல் ஜி.கே.மணி, காடுவெட்டி குரு எம்.எல்.ஏ உள்ளிட்டபாமகவினர், வன்னியர் சங்கத்தினர் தகராறு செய்தனர். நிர்வாகக் குழுவினரை தாக்கவும் முயன்றனர்.
இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகக் குழு செயலர் குமார் என்பவர் சென்னை-வேப்பேரி போலீஸில் புகார்கொடுத்தார். அதன் அடிப்படையில் மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்ய போலீஸார்தனிப்படை அமைத்தனர்.
அதன் அடிப்படையில் பாமகவைச் சேர்ந்த ஏழுமலை, கருணாகரன், குணா என்ற குணசேகரன், பழனி மற்றும்வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன் உள்ளிட்ட 17 பேரைப் போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணி இன்று காலை சென்னை பெருநகர தலைமை நீதிமன்றத்தில் நீதிபதிமுனிரத்னம் முன்னிலையில் சரணடைந்தார்.
இதையடுத்து அவரை வரும் டிசம்பர் 5ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி முனிரத்னம்உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை மத்திய சிறையில் மணி அடைக்கப்பட்டார்.
தலைமறைவாகியுள்ள காடுவெட்டி குருவை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அவரும் விரைவில்சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications