கலாம் கண்டனம்: நாடு முழுவதும் கோவில்களுக்கு பாதுகாப்பு
டெல்லி:
ஜம்மூவில் உள்ள புகழ்பெற்ற ரகுநாத் கோவிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு ஜனாதிபதிடாக்டர் அப்துல் கலாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடுமுழுவதும் உள்ள முக்கியமான கோவில்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரகுநாத் கோவிலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 13 பேர்கொல்லப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மூன்று லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று இரவு அவசரமாகக் கூடிவிவாதித்தது.
ரகுநாத் கோவிலுக்கு தேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்களை அனுப்ப இந்தக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரவோடு இரவாக டெல்லியிலிருந்து கமாண்டோக்களும் ஜம்மூவுக்குஅனுப்பப்பட்டனர்.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து முக்கியமான கோவில்களுக்கும் பாதுகாப்பை தீவிரப்படுத்த இந்தக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கர்நாடகத்தில் உள்ள இஷ்கான் கிருஷ்ணர்கோவில், குஜராத்தில் ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான சுவாமி நாராயணன் கோவில் உள்ளிட்டஏராளமான கோவில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலாம் கண்டனம்:
இந்நிலையில் ரகுநாத் கோவிலில் தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கடும்கண்டனம் தெரிவித்தார்.
நேற்று இரவு வாஜ்பாயிடம் தொலைபேசி மூலம் பேசிய டாக்டர் கலாம், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்தார்.
பின்னர் டாக்டர் கலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரகுநாத் கோவிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நம்பாதுகாப்புப் படையினர் உடனடியாக இதைச் சமாளித்து பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றுவார்கள் என்றுநம்புகிறேன்.
மக்கள் சென்று வழிபடும் இடங்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது என்னை மிகவும்கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார் டாக்டர் கலாம்.
நாடாளுமன்றத்தில் அமளி:
இதற்கிடையே ரகுநாத் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில்எதிர்க் கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
லோக்சபாவின் இன்றைய கூட்டம் தொடங்கிய உடனேயே இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் அவர்கள்கோஷங்கள் எழுப்பினர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து, இது தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று சபாநாயகர் மனோகர் ஜோஷியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் வற்புறுத்தினர்.
ராஜ்யசபாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. எதிர்க் கட்சி எம்.பிக்ககள் இங்கும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரம் பத்து நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானி இன்று பிற்பகல் ஒரு அறிக்கையை நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்தார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்றும் அத்வானி மிகவும் கடுமையாகக்குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே இச்சம்பவத்தைக் கண்டித்து காஷ்மீர் சட்டசபையிலும் இன்று தேசிய மாநாட்டுக் கட்சியினர் கடும்அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள்கோஷம் போட்டனர்.
ஆனால் சபாநாயகர் தாரா சந்த் இதற்கு மறுக்கவே அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள்வரை கோஷம் போட்டுக் கொண்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சியினர் பின்னர் அவையிலிருந்து வெளிநடப்புசெய்தனர்.
அமெரிக்கா கண்டனம்:
இந்நிலையில் இந்தத் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்வானியை இன்று காலை சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில், ரகுநாத் கோவிலில்தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பிளாக்வில், "தாக்குதல் நடத்திய இந்தத் தீவிரவாதிகளெல்லாம் மனிதர்கள் தானா?அப்பாவிப் பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் துப்பாக்கியால் சுடும் போது கொஞ்சம் கூடஅந்தத் தீவிரவாதிகள் இதைப் பற்றி சிந்திக்க மாட்டார்களா?" என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications