நடுக்கடலில் இந்திய கேப்டனுக்கு கத்திக் குத்து
கொச்சி:
ஜப்பானியக் கப்பலில் நடுக்கடலில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய கேப்டனையும், இந்திய கப்பல் அதிகாரியையும் கடலோரக்காவல் படை மீட்டது.
ஜப்பானின் ஜேம்ஸ் ரிவர் பிரிட்ஜ் என்ற சரக்குக் கப்பல் எகிப்தில் இருந்து சிங்கப்பூருக்குக் சென்று கொண்டிருந்தது. கப்பலைஇந்தியரான கேப்டன் எச்.சிங் இயக்கிக் கொண்டிருந்தார். கப்பலின் தலைமை அதிகாரியான பிரதீப் குமாரும் இந்தியரே.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடுக்கடலில் கப்பலின் ஊழியர்களிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. விவகாரம் முற்றியதில்கப்பலிலேயே கைகலப்பும் நடந்துள்ளது.
அப்போது கப்பலின் கேப்டன் சிங்கையும் பிரதீப் குமாரையும் கப்பலின் ஊழியர்களில் ஒருவரான ரேமண்ட் கத்தியால் குத்தினார்.ரேமண்ட் பில்ப்பைன்ஸைச் சேர்ந்தவர்.
கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த சிங்குக்கும் பிரதீர் குமாருக்கும் கப்பலியேயே முதலுதவி தரப்பட்டது. ஆனால், அவர்களதுநிலைமை கவலைக்கிடமானதையடுத்து அந்தக் கப்பலில் இருந்து அவசர உதவி கோரி ரேடியோ தகவல் பறந்தது.
இந்த ரேடியோ தகவலை லட்சத்தீவுகளில் உள்ள இந்தியக் கடற்படையின் கடலோரக் காவல் படை கேட்டது. இதையடுத்து அந்தக்கப்பலை லட்சத்தீவுகளை நோக்கி வருமாறு காவல் படை அழைத்தது. ஆனால், கேப்டன் இல்லாமல் அந்தக் கப்பலை இயக்கியஊழியர்களால் லட்சத்தீவுகள் நோக்கி கப்பலைச் செலுத்த முடியவில்லை.
அந்தக் கப்பல் தவறுதலாக கொச்சி கடல் பகுதியை நோக்கிச் சென்றது. இதையடுத்து இன்று காலை கொச்சியில் உள்ள கடலோரக்காவல் படையினர் கப்பலை அடைந்தனர்.
அங்கு மயங்கிக் கிடந்த சிங்கையும் பிரதீப் குமாரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இருவரும் தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேப்டன் சிங்குக்கு கன்னத்திலும் பிரதீப் குமாருக்கு நெஞ்சிலும் கத்திக் குத்து விழுந்துள்ளது. சிங் அம்ரிஸ்தரைச் சேர்ந்தவர்,குமார் டெல்லியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
பனாமாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல் டோக்கியோவைச் சேர்ந்த கே ஷிப்பிங் லைன் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
இத் தகவல்களை கடலோக் காவல்படையின் கமாண்டன்ட் குருபிரசாத் சிங் தெரிவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications