இந்தியாவின் முதல் குளோனிங் விலங்கு சென்னையில் தயாராகிறது
சென்னை:
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆடு மற்றும் எருமை மாட்டின் குளோனிங் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவின் முதல் குளோனிங் விலங்கு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் லிஸ் சைமன் என்ற சென்னை கால்நடை மருத்தவக் கல்லூரியின் ஆராய்ச்சி மாணவி இந்த குளோனிங் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு ஆடு மற்றும் எருமை மாட்டை தனது குளோனிங்கிற்காக எடுத்துக் கொண்டுள்ளார். இரண்டு விலங்குகளிலிருந்தும் செல் மாற்றம் கூட நடைபெற்றுவிட்டது.
விரைவில் இரு விலங்குகளில் ஒன்று கருத்தரிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார் டாக்டர் லிஸ்.
குளோனிங் செய்வதற்கு ஆடு மற்றும் எருமை மாட்டை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தையும் கூறுகிறார் டாக்டர் லிஸ்.
இந்த இரு விலங்குகளிலிருந்தும் ஏராளமான கரு முட்டைகள் கிடைக்கும். குளோனிங்கின்போது அதிக முட்டைகள் தேவைப்படும்.
இரு விலங்குகளும் தினசரி அதிக அளவில் கொல்லப்படுகின்றன. அப்படிக் கொல்லப்பட்ட விலங்குகளிலிருந்து கரு முட்டைகளை எடுப்பது எளிதான காரியம்.எனவேதான் ஆடு மற்றும் எருமை மாட்டைத் தேர்வு செய்ததாக கூறுகிறார் டாக்டர் லிஸ்.
ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளை முடித்து விட்ட டாக்டர் லிஸ், தற்போது விலங்குகள் கருத்தரிக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பணிக்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில அதி நவீன கருவிகளும் வாங்கப்படவுள்ளன.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் முதலாவது குளோனிங் ஆராய்ச்சி இது என்பதால் இந்தப் பணிக்காக செலவு செய்யவிருப்பதாக பல்கலைக்கழக விலங்குகள்இனப்பெருக்கத் துறை தலைவர் டாக்டர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
போதுமான நிதியுதவி இல்லாத காரணத்தால்தான் இந்தியாவில் இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை என்று பல்கலைக்கழக துணைவேந்தர்டாக்டர் கதிர்வேலு தெரிவித்தார்.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications