வார ராசி பலன் (ஜூன் 29 - ஜூலை 5): விருச்சிக ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்.. புதிய வாய்ப்புகள் கதவை தட்டும்
Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசியினர் புதிய புதிய விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இழுபறியாக இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் ரீதியாக காணப்பட்டிருந்த சங்கடங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அக்கம்பக்கத்தினர், அண்டையார் அயலார், கூடாநட்பு, மேலதிகாரிகள், அரசுத் துறை, அரசியல்வாதிகள், படைப்பாளிகள், இளம் வயதை சார்ந்த விருச்சிக ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வாகனம்
வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கவனசிதறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். இரவு நேர கேளிக்கை, கூடா நடப்பு, தேவையில்லாத பழக்க வழக்கங்கள், சட்ட விரோத செயல்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
கவனம்
பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன், புதன் வக்கிரமாக இருப்பதால் டிக்கெட் கேன்சலாகும். அப்பாயின்மென்ட், பயணங்கள் தடைபடும் வாய்ப்புள்ளது. கவனக் குறைவால் பண இழப்புகள், பயணத்தால் பண இழப்புகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நிலம், வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் ஆவணங்களை ஒருமுறைக்கு, இருமுறை செக் செய்து கொள்வது நல்லது.
குட்நியூஸ்
அஷ்டமத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் எலும்புகள் பாதிப்பு, கழுத்து பாதிப்பு போன்ற பாதிப்புகள் வந்து செல்வதற்கான வாய்ப்புள்ளது. குருவும் சுக்கிரனும் திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் நிறைய பேருக்கு நல்ல மதிப்பு, புதிய வரவுகல், புதிய விஷயங்கள் நடக்கும் யோகம் உண்டு. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய அனுகூலம் ஏற்படும்.
வழிபாடு
உத்தியோகம் ரீதியாக காணப்படும் நல்ல விஷயங்கள் நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
பெருமாள், தாயார், அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 85 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் ஏற்படும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications