திமுக ஆட்சியில் ஊழல் செய்தது யார்? விவரங்களை திரட்டும் முதல்வர் விஜய்.. சுட சுட ரெடியாகும் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து சரிசெய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்தும் தமிழக முதல்வர் விஜய் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

இது தொடர்பான விரிவான அறிக்கைகள் சேகரிக்கப்பட்டு வருவதால், விரைவில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

vijay tvk dmk

துறை வாரியாக வெளியாகும் 'வெள்ளை அறிக்கை'

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலங்களில் அரசுத் துறைகளில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகளை வெளிக்கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒவ்வொரு அரசுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலைமை குறித்த 'வெள்ளை அறிக்கை' (White Paper) வெளியிடப்படும் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் அடுத்தகட்டமாக, தற்போது தமிழக அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மிக முக்கியமான மற்றும் ரகசிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துத் துறைகளும் தங்களின் கடந்த ஐந்து ஆண்டுகால முழுமையான விவரங்களை விரிவாகத் தொகுத்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த உத்தரவில், பின்வரும் முக்கிய விவரங்களைக் கோரியுள்ளனர்:

ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள்: கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், துறை சார்ந்த விசாரணைகளின் விபரங்கள்.

அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஐந்தாண்டுகளில் முக்கிய அதிகாரிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அதற்கான காரணங்கள் மற்றும் செலவழிக்கப்பட்ட அரசு நிதி.

பணி நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள்: கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள், புதிய பணியாளர் நியமனங்கள், மற்றும் பரவலாக நடைபெற்ற இடமாற்றங்களுக்கான பின்னணி மற்றும் அங்கீகார விபரங்கள்.

காத்திருப்போர் பட்டியல் (Waiting List): தற்போது எந்தெந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 'காத்திருப்போர் பட்டியலில்' வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான முழு விபரம்.

இதுமட்டுமன்றி, ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளுக்கு உதவியாக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் பணியிடங்கள், துறை ரீதியான அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் தனிநபர்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்களையும் அரசு கேட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள துறைசார் வழக்குகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தேவைப்படும் முக்கியத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் நிதி அமைச்சர் மரியா வில்சன் அதிரடி பேட்டி

இப்படியிருக்க, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதி அமைச்சர் டாக்டர் என். மரியா வில்சன், மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

அவர் கூறும்போது, "தமிழகத்தின் வருவாய் தற்போது பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளது உண்மைதான். கடந்த கால தவறான நிர்வாகமே இதற்கு முக்கிய காரணம். இருப்பினும், இந்த வருவாய் இழப்புகள் மற்றும் நிதிப் பற்றாக்குறைகள் அனைத்தும் வரும் நாட்களில் முற்றிலும் சரி செய்யப்படும். நிதி நிலை சீரானதும், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட அனைத்தும் தடையின்றிச் சரியாகச் செயல்படும்" என்று உறுதியளித்தார்.

மேலும் முந்தைய ஆட்சியின் ஊழல்கள் குறித்துப் பேசிய நிதி அமைச்சர் மரியா வில்சன், "கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் நிதி விரயங்கள் குறித்து முதல்வர் விஜய் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இந்த முறைகேடுகளுக்குக் காரணமான தனிநபர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார் என்பதை அடையாளம் காணும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. பொதுமக்கள் யாரும் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை; இந்த ஆய்வின் முடிவுகளும், எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகளும் விரைவில் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

புதிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் விசாரணை உத்தரவுகள், தமிழக அரசியல் வட்டாரத்திலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+