திமுக ஒரு தீய சக்தினு சொன்னதே எம்ஜிஆர் தான்.. முக ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
சென்னை: மக்கள் திலகம் எம்ஜிஆர் இருந்த கட்சிக்கு, எம்ஜிஆர் பொருளாளராக இருந்து செயல்பட்ட கட்சிக்கு வந்துள்ளீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தான் எம்ஜிஆர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியிருந்தார். இந்ந்லையில், திமுகவை தீயசக்தி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர் என முக ஸ்டாலினுக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது.
சென்னை வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியினர் 5000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி மேடையில் பேசிய மு.க ஸ்டாலின்," மக்கள் திலகம் எம்ஜிஆர் இருந்த கட்சிக்கு, எம்ஜிஆர் பொருளாளராக இருந்து செயல்பட்ட கட்சிக்கு வந்துள்ளீர்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தான் எம்ஜிஆர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

மு.க. ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து தனிக் கட்சியை கண்டார். தனிக்கட்சி தொடங்கிய பிறகும் சட்டமன்றத்தில் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு தொண்டர் ஒருவர் பேசிய பொழுது உங்களுக்கு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது அந்த தொண்டரை கண்டித்தார். உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம். ஆனால், எனக்கு தலைவர் கலைஞர் என எம்ஜிஆர் தெரிவித்தார். நான் மாணவனாக இருந்த போது சைதாப்பேட்டையில் நாடகம் நடத்திய பொழுது அதனை காண்பதற்கு எம்ஜிஆர் அவர்கள் வந்தார்" என பேசியிருந்தார்.
எம்ஜிஆர்
இந்நிலையில், முக ஸ்டாலினின் எம்ஜிஆர் குறித்த பேச்சுக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில்,"எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் திமுகவில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திரு.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க பேசினார். தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார்.
தவெக
ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் வரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?.
சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்.இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் சார்.
ஆட்சி அதிகாரம்
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார். ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும் இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி." என கூறியுள்ளது.














Click it and Unblock the Notifications