சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற வானவில் பேரணி.. LGBTQ+ சமூகத்தினர் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பிரைட் மாதத்தை முன்னிட்டு LGBTQ+ சமூகத்தினரின் உரிமைகளை வலியுறுத்திப் பேரணிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னை எழும்பூரில் மாற்றுப் பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் பங்கேற்புடன் "வானவில் சுயமரியாதை பேரணி" கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளான பறை இசை மற்றும் தப்பாட்ட முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றது. மாற்றுப் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Rainbow Self-Respect Rally 2026 LGBTQ Community Holds Vibrant Pride March in Chennai

வண்ணமயமாக நடந்த பேரணி

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்த பேரணி, புதுப்பேட்டை லங்சு கார்டன் சாலை வழியாகச் சென்று மீண்டும் எழும்பூர் கம்யூனிட்டி ஹால் அருகே நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் வானவில் வண்ணக் கொடிகள், வண்ண மயமான பலூன்கள் மற்றும் தங்களது உரிமைகளை பறைசாற்றும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

மேலும், தாரை தப்பட்டை முழங்க, பாரம்பரிய நடனமாடியும், மேள தாளங்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தினர்.

பேரணியின் முக்கிய நோக்கம்

சமூகத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், பாகுபாடுகள் மற்றும் கேலி கிண்டல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், தங்களது தனித்துவத்தை உலகிற்கு உரக்கச் சொல்வதுமே இந்த பேரணியின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

காதல், பாலின அடையாளம் மற்றும் வாழும் உரிமை ஆகியவை அனைவருக்கும் சமமானது என்பதை வலியுறுத்திப் பல்வேறு முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

முக்கிய கோரிக்கைகள்

இந்த வானவில் சுயமரியாதை பேரணியின் வாயிலாகத் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மத்திய-மாநில அரசுகளுக்குப் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மாற்றுப் பாலினத்தவர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகக் கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

வாழ்வாதாரமின்றித் தவிக்கும் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பிரத்யேக நலத்திட்டங்களை அரசு இன்னும் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.

தங்களைச் சமமான மனிதர்களாகக் கருதி, சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மற்றும் தங்களது உரிமைகளுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பெருகிவரும் ஆதரவு

கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நடைபெற்ற பேரணியில் LGBTQ+ சமூகத்தினர் மட்டுமன்றி, அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பாகுபாடுகளற்ற, சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்க இத்தகைய பேரணிகள் தங்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தருவதாகப் பேரணியில் பங்கேற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+