காத்திருந்த இந்திய அணி நிர்வாகம்.. வாய்ப்பை தேடி சென்று கொடுத்த சஞ்சு சாம்சன்.. இனி கஷ்டம்தான்!

Subscribe to Oneindia Tamil

பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். ஏற்கனவே முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் காரணம் தேடி வந்த நிலையில், சஞ்சு சாம்சன் தாமாக சென்று மாட்டிக் கொண்டுள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்துள்ளது. அயர்லாந்து அணியின் டெக்டர் 47 பந்துகளில் 53 ரன்களை எடுத்தார்.

Sanju Samson

இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அயர்லாந்து அணியின் ஜெய் மூன்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

சஞ்சு சாம்சனின் இந்த விக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சஞ்சு சாம்சன் சொதப்பி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சூர்யவன்ஷியை டி20 அணியின் பிளேயிங் லெவனில் கொண்டு வர இந்திய நிர்வாகம் காரணம் தேடி வருகிறது.

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகிய மூவரில் யார் அதிக தவறு செய்கிறார்களோ, அவர்களை இந்திய அணி நிர்வாகம் விரைவில் பெஞ்ச் செய்ய தயாராகி வருகிறது. இதில் சஞ்சு சாம்சனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால், அவர் வலது கை பேட்ஸ்மேனாக இருப்பதுதான். ஏனென்றால் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய மூவரும் இடதுகை பேட்ஸ்மேன்கள்.

ஆனால் அபிஷேக் சர்மா கடந்த போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் விளாசி இருக்கிறார். இஷான் கிஷன் ஏற்கனவே ஒருநாள் தொடரில் சதம் விளாசி ஃபார்மை நிரூபித்துள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் இன்னும் ஃபார்மை நிரூபிக்கவில்லை. இதனால் இங்கிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சிறிய சொதப்பல் செய்தாலும், உடனடியாக அவரது இடத்தை வைபவ் சூர்யவன்ஷியை வைத்து இந்திய அணி நிரப்பும்.

இதனால் சஞ்சு சாம்சனை நீக்கி இந்திய அணி நிர்வாகம் காரணம் தேடி வந்த சூழலில், சஞ்சு சாம்சன் தாமாக சென்று மாட்டிக் கொண்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் முதல் சில ஓவர்களில் கொஞ்சம் நிதானம் காக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன், மீண்டும் அந்த ஃபார்மில் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+