"ஆட்சிக்கு வந்து மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்வோம்": கருணாநிதி
சென்னை:
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம், பஸ்கள் தனியார்மயம் ஆகியவை ரத்துசெய்யப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் சென்னையில் நேற்று இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சித்தலைவர் சுலைமான் சேட் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கருணாநதி, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, சங்கரய்யா, வரதராஜன், விடுதலைச் சிறுத்தை அமைப்பின்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அரசு பஸ்கள் தனியார்மய கொள்கை குறித்த பயம்தொழிலாளர்களுக்கு வேண்டாம்.
கூடிய விரைவில் தனியார்மயமாக்கப்படும் அரசு பஸ்கள் மீண்டும் தேசியமயமாக்கப்படத்தான் போகிறது.
அதேபோல, கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தின் ஆபத்தை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். அந்த பயம்தேவையில்லை. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடத்தான் போகிறது.
இவையெல்லாம் எங்கள் கையில் இல்லை. உங்கள் கையில் அதாவது தமிழக மக்களின் கையில்தான் உள்ளது.திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், உங்களால் கொண்டு வரப்பட்டால் இந்த கருப்புச் சட்டங்கள்நாட்டை விட்டு விரட்டப்படும் என்றார் கருணாநிதி.
-->
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications