ஜி.கே. மணிக்கு ஜாமீன் கிடைக்குமா?- நாளை விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்குஒத்திவைக்கப்பட்டது.
செங்கல்வராய அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மணி உள்ளிட்ட 26 பேர்,தங்களை ஜாமீனில் விடக்கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராமலிங்கம் முன்பு இன்று காலை நடந்தது.
அப்போது அரசுத் தரப்பு வக்கீல், பதில் அளிக்க அவகாசம் கேட்டார். இதையடுத்து நாளை வரை விசாரணையைஒத்திவைத்து நீதிபதி ராமலிங்கம் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications