கிருபாநிதிக்கு வேட்டு: பா.ஜ.கவுக்கு விரைவில் புதிய தலைவர்
சென்னை:
தமிழக பாரதீய ஜனதாக் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. அப்போது புதிய தலைவர்தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்தது. தலைவர்கிருபாநிதியும் இதில் கலந்து கொண்டார். அனைத்து நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கட்சி நிர்வாகத் தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய தலைவரைப் போட்டியின்றிதேர்ந்தெடுக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தற்போதைய தலைவர் கிருபாநிதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனாலேயே அவருக்கு கட்சியின் முன்னணித்தலைவர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. பெயருக்குத் தான் அவர் தலைவராக இருந்தார்.
ஆனால், பிற சமூகங்களைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் மட்டத் தலைகள் தான் முக்கியத்துவம் பெற்றன. இதனால்கிருபாநிதி வெறுத்துப் போய் ஒதுங்கியே இருந்து வருகிறார். மாநிலத் தலைவருக்கும் பிற தலைவர்களுக்கும்இடையே நல்லுறவு இல்லை.
இதனால் மீண்டும் அவருக்குத் தலைவர் பதவியைத் தருவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
அடுத்து வருகிற தலைவர் தங்களுக்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் பிற முக்கியதலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
புதிய தலைவர் பதவிக்கு மூத்த தலைவரான டாக்டர் எச்.வி. ஹண்டே (எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் நலத்துறைஅமைச்சராக இருந்தவர், கன்னட மொழி பேசும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்), மத்திய அமைச்சர்பொன். ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
பெரும்பாலும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே இந்த வாய்ப்பு போகலாம். கிருபாநிதி கட்சிக்குள்ளேயேஒட்டுமொத்தமாக ஒதுக்கப்படலாம்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications