மதமாற்ற தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை:
சமீபத்தில் கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் ஒப்புதல்அளித்தார்.
தமிழக அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்தை இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க. தவிர அனைத்துக் கட்சிகளும்,சிறுபான்மை மதத்தினரும், தலித்துகளும் கடுமையாக எதிர்த்தனர்.
கடந்த சட்டசபைத் தொடரில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி பல்வேறுபோராட்டங்கள், மாநாடுகளும் கூட தமிழகத்தில் நடைபெற்றன.
பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்தச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரிபல்வேறு கட்சிகளும், சிறுபான்மை மதத்தினரும், தலித்துகளும் அவரிடம் பலமுறை மனுக்களை கூட அளித்தன.
கடந்த திங்கள்கிழமை காலையில் கூட கிறிஸ்தவ அமைப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும்ஆளுநரைச் சந்தித்து, இது கருப்புச் சட்டம் என்பதால் இதற்கு ஒப்புதல் தரக் கூடாது என்று கோரிக்கை விடுத்தன.
ஆனால் அன்று மாலையிலேயே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டார்.இதைத் தொடர்ந்து நேற்று தமிழக அரசிதழிலும் அசாதாரண அறிவிப்பாக இதுகுறித்து வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அமலுக்கு வந்து விட்டது.
தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம்-2002 எனப்படும் இந்த சட்டத்தின்படி, ஒரு மதத்திலிருந்துஇன்னொரு மதத்திற்கு ஒருவரை கட்டாயப்படுத்தியோ, ஆசை வார்த்தை கூறியோ, பொருட்கள் தருவதாககூறியோ மாற்றினால் ரூ.50,000 வரை அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் பெண்ணாகவோ, சிறுவயதினராகவோ அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடிஇனத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால் மதமாற்றம் செய்தவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications