சுசீந்திரம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்
சுசீந்திரம்:
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய கோவிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு நேற்று ஒரு மர்ம பெண்ணிடமிருந்து தொலைபேசிஅழைப்பு வந்தது.
தாணுமாலய கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சிறிது நேரத்தில் அது பயங்கரமானவெடிக்கும் என்றும் தொலைபேசியில் பேசிய பெண் கூறினார்.
இதையடுத்து அந்தக் கோவிலை 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள்முற்றுகையிட்டனர்.
பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் உள்பட 1,000க்கும் மேற்பட்டவர்கள் கோவிலில்இருந்தனர்.
போலீசார் மைக்கில் அறிவிப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவர்களும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.பின்னர் கோவிலின் கர்ப்ப கிரகம் நடையும் சாத்தப்பட்டது.
இதையடுத்து போலீசார் கோவிலுக்குள் தீவிர சோதனை நடத்தினர். பல மணி நேரம் சோதனை நடத்தியும்வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அந்தத் தொலைபேசி மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
இருந்தாலும் கோவிலுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தபெண்ணைத் தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல கோவில்களைத் தகர்ப்பதற்காக பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பயங்கரவாதஅமைப்பைச் சேர்ந்த 20 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக சமீபத்தில் தான் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 10 தீவிரவாதிகள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10தீவிரவாதிகளைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் சுசீந்திரம் கோவிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்புநிலவியது.
மற்றொரு மிரட்டல்:
இதற்கிடையே கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்வந்துள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான வரும் டிசம்பர் 6ம் தேதி மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்வெடிக்கும் என்றும் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள் என்றும் அந்தக் கடிதத்தில்தெரிவிக்கப்பட்டிருந்தது.
"இப்படிக்கு, அல்-உம்மா" என்றும் அந்தக் கடிதத்தின் முடிவில் எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இம்மாவட்டத்தில் போலீசார்பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் கோவில்களில் போலீசார் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications