டிசம்பர் 6: போலீசாரின் விடுமுறை ரத்து- பாதுகாப்புப் பணியில் 75,000 காவலர்கள்
சென்னை:
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 10வது ஆண்டு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் அசம்பாவிதச் சம்பவங்கள்நடைபெறாமல் தடுக்கும் பொறுட்டு 75,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அன்று காவலர்களுக்குவிடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை டிசம்பர் 6ம் தேதி வருவது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் அம்பேத்கரின்பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆயிரக்கணக்கான தலித்கள் மதம்மாறவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் ஏந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு காவல்துறை மிகுந்தஉஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து போலீசாரும் பணியில் இருக்குமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது.
டி.ஜி.பி. பேட்டி:
சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. பாலச்சந்திரன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விரைவு அதிரடிப்படை, தமிழ்நாடு சிறப்புப் போலீஸ், கமாண்டோக்கள் ஆகியோர் முக்கியமான இடங்களில்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள், ரயில்வே நிலையங்கள், பஸ்நலையங்கள், மார்க்கெட்டுகள், தியேட்டர்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களிலும்பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
ரயில்களில் அனைத்துப் பயணிகளும் சோதிக்கப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.
மாநிலத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வெடிபொருள் விற்பனையாளர்கள், தங்களிடம் உள்ள வெடிபொருட்கள்விற்பனை குறித்த முழு ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும். வெடிபொருள்கள் இருப்பையும்சரியாக வைக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுப்போம்.
மத மோதல்களைத் தூண்டும் வகையிலான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டுவோர், விளம்பரம்எழுதுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
கண்டதும் சுட உத்தரவு:
சென்னையில் 500 காமாண்டோ படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 30 வெடிகுண்டுநிபுணர்களும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை கண்டதும் சுடவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் மதரீதியில் பதற்றமான பகுதிகளான உக்கடம், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் 800 போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. லாட்களும் அடிக்கடி சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.
திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதே போன்ற நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications