ஜெயலலிதாவை எதிர்த்து திமுகவுடன் இணைந்து போராட்டம்: வைகோ அறிவிப்பு
நாகப்பட்டிணம்:
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்து திமுகவுடன் இணைந்து போராட்டம் நடத்தப் போவதாகமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து பிரிந்த பின்னர் இரு கட்சிகளும் இணைந்து நடத்தப் போகும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறையில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல் மோதல் தொடர்பான வழக்கில் ஆஜராக இன்று வைகோ வேலூர் சிறையில்இருந்து நாகப்பட்டிணம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விசாரித்த நீதிபதி மீனாட்சிசுந்தரம் வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றையதினம் வைகோ மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த வைகோ போலீஸ் வேனில் அமர்ந்தவண்ணம் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர்கூறுகையில்,
தமிழகத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடி வருகிறது. இந் நிலையில் அரசு போக்குவரத்துக் கழகத்தையும்தனியார்மயமாக்கிவிட்டு அதில் வேலை செய்பவர்களின் பிழைப்பிலும் மண்ணைப் போட தமிழக அரசு முயல்கிறது.
லாபத்தில் இயங்கும் வழித் தடங்களையும் தனியார்மயமாக்குவது ஏன்?
ஜெயலலிதா அரசின் இந்த அராஜகமான போக்கைக் கண்டித்து திமுகவுடன் இணைந்து மதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்றார் வைகோ.
வேலூர் சிறையில் வைகோவை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துவிட்டுத் திரும்பியது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே புதியநட்புறவு உருவாகியுள்ளது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications