நாகப்பா மரணத்துக்கு ஜெ, கர்நாடக அரசு தான் காரணம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாகப்பா கொல்லப்பட்டதற்கு கர்நாடக அரசும் தமிழக அரசும் தான் காரணம் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கொளத்தூர் மணியை ஜாமீனில் விடுவதில் கர்நாடகம் காட்டிய மெத்தனமும், வீரப்பனிடம் ஒருஅப்பாவியின் உயிர் சிக்கியிருக்கிறதே என்ற கவலையே இல்லாத ஜெயலலிதாவின் பொறுப்பின்மையும் தான் இந்த சம்பவத்துக்குக்காரணம்.

ஜாமீனில் கொளத்தூர் மணி வெளியே வந்திருந்தால் வீரப்பனுடன் பேச்சாவது நடத்த ஆரம்பித்திருப்பார். அதை கர்நாடகம் கெடுத்தது.அவரை ஜாமீனில் வெளியே எடுப்பது அவ்வளவு பெரிய விஷயமா. இதில் அளவு கடந்த தாமதத்தைக் காட்டினார்கள்.

தமிழக அரசோ இது ஏதோ வேறு நாட்டு பிரச்சனை மாதிரி நடந்து கொண்டது. கொஞ்சம் கூட அக்கறையே காட்டவில்லை.

திமுக ஆட்சியில் இருந்தபோது சரணடைந்துவிடக் கூட வீரப்பன் முன் வந்தான். ஆனால், ஜெயலலிதா உள்ளிட்ட பல கட்சிகள் அதைஎதிர்த்தன. இதனால் சரணடைய மாட்டேன் என்று கூறிவிட்டான்.

வீரப்பனை சரணடைய வைத்து தனி சிறையில் அடைக்கக் கூட நான் திட்டமிட்டேன். இதற்காக ஒரு சிறையையும் கூட அடையாளம் கண்டுஒதுக்கினோம். அவன் சரணடைந்திருந்தால் இந்தத் தொல்லைகள் எல்லாம் தொடர்ந்திருக்காது. அப்போதே எல்லாம் ஓய்ந்து போயிருக்கும்.

அதே போல மத்திய அரசும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட பொறுப்புடன் செயல்பட வில்லை. கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும்உதவுவோம் என்று வெறும் பேச்சுக்கள் தான் மத்திய அரசிடம் இருந்து வந்தன. உண்மையில் எந்த உதவியையும் செய்ததாகத்தெரியவில்லை.

வீரப்பன் கும்பலுடன் தமிழக அதிரடிப்படை சண்டை போட்டு, அதில் நாகப்பாவும் காயமடைந்தார் என்று கூறப்படுவதை தமிழக முதல்வர்,டிஜிபி ஆகியோர் மறுத்துள்ளனர். நானும் அப்படியே நினைக்கிறேன். முதல்வரும்,டிஜிபியும் கூறுவதே உண்மையாக இருக்கும் என்றார்கருணாநிதி.

சாவில் மர்மம்: காங்கிரஸ்

நாகப்பாவின் மரணத்தில் பெரும் மர்மம் இருப்பதால் அது குறித்த முழு விவரங்களையும் மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் எனகாங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாகப்பாவை தமிழக அதிரடிப் படை கொன்றதாக வீரப்பனும், வீரப்பன் கொன்றதாக அதிரடிப்படையும்பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன. இதில் உண்மை என்ன? அதைத் தெரிந்து கொள்ள மக்களுக்கு முழு உரிமை உண்டு.

நாகப்பா விடுவிப்பில் கர்நாடகத்துக்கு தமிழகம் போட்ட தடைகள் தான் இந்த மரணத்துகுக் காரணம் என்று நினைக்கிறேன். முதல்வர்ஜெயலலிதா இனியாவது உயிர்களுடன் மல்லுக்கு நிற்பதை கைவிட்டு விட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த மரணத்தால் இதனால்இரு மாநில மக்களிடையே கசப்புணர்வு பரவிவிடக் கூடாது.

பக்கத்தில் இருக்கும் மாநிலத்துடன் நட்புடன் வாழ முதலில் ஜெயலலிதா அரசு பழக வேண்டும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதாரஜன் விடுத்துள்ள அறிக்கையில், காடுகளில் மறைந்து வாழ்ந்து, கடத்தலை மேற்கொண்டு,கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டுள்ள வீரப்பனைப் பிடிக்க இனியாவது இரு மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+