மாட்டிக் கொண்ட கொளத்தூர் மணி: ஜாமீனில் விட கர்நாடகம் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பா கொல்லப்பட்டவிட்டதால் அவரை மீட்க தூதராக செல்ல இருந்த கொளத்தூர் மணிக்கு ஜாமீன்தருவதை எதிர்க்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகத்தில் கொளத்தூர் மணி மீது 6 வழக்குகள் உள்ளன. நாகப்பாவை விடுவிக்க மணியைத் தான் தூதராக அனுப்ப வேண்டும் எனவீரப்பன் நிபந்தனை விதித்ததால் அவரை ஜாமீனில் விட அரசு முன் வந்தது.

அவர் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்தபோது அதை கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் மறுக்கவில்லை. இதனால் பல்வேறுநீதிமன்றங்களில் 4 வழக்குகளில் ஜாமீன் பெற்றார். ஆனால், இரு வழக்குகளில் மட்டும் ஜாமீன் பெற வேண்டி இருந்தது. மைசூர்நீதிமன்றத்தில் இந்த இரு வழக்குகளில் ஜாமீன் கோரி மணி மனு தாக்கல் செய்தார்.

அதையும் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இரு தனி நபர்கள் இந்த ஜாமீனை எதிர்த்து மனு போட்டனர். இதனால்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவருக்கு ஜாமீன் தர முடியாது என்று நேற்று மைசூர் நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து இந்த இரு வழக்குகளிலும் ஜாமீன் கோரி கர்நாடக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப் போவதாக கொளத்தூர் மணியின்வழக்கறிஞர் பிரகாஷ் கூறினார்.

அப்படி மனு தாக்கல் செய்தால், அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று எதிர்க்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

அதே போல மணி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டதையும் கர்நாடக அரசு திரும்பப் பெற்றுவிட்டது.

இது குறித்து சட்ட அமைச்சர் சந்திரே கெளடா நிருபர்களிடம் கூறுகையில், கொளத்தூர் மணி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படாது.அவரது ஜாமீனை எதிர்த்து மனுக்கள் போடுவோம் என்றார்.

இதனால் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார் என்று கருதப்பட்ட கொளத்தூர் மணி கர்நாடக அரசிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

அவரை ஜாமீனில் விட்டு தமிழக எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்வோம் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் மணிக்கு எதிராக தமிழகத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் அவரை விடுதலையானவுடன் கொத்திச் செல்ல தமிழக போலீஸ்படையும் பெங்களூரில் வந்து ரகசியமாக டேரா போட்டிருந்தது. தமிழகத்தில் அவர் மீது 5 வழக்குகள் உள்ளன.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+