நாகப்பா கொலையில் நக்சலைட்டுகளுக்கு தொடர்பு: உளவுப் பிரிவு சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

சு.தா. அறிவழகன்

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை சுட்டுக் கொன்றது நக்சலைட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம்தமிழக காவல்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.

வீரப்பன் பிடியில் 106 நாட்களாக இருந்து வந்த நாகப்பா திடீரென்று காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாகமீட்கப்பட்டுள்ளார். அவரைக் கொன்றது யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

தமிழக அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் நாகப்பா காயமடைந்ததாக வீரப்பன் அனுப்பிய கேசட்டில்கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிரடிப்படைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அதிரடிப்படைத் தலைவர்தேவாரம், முதல்வர் ஜெயலலிதா, டிஜிபி நெய்ல்வால் ஆகியோர் மறுத்துள்ளனர்.

இந் நிலையில் நாகப்பாவின் சாவுக்கு யார் காரணம் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

தமிழக உளவுப் பிரிவு போலீஸாருக்குக் கிடைத்துள்ள ஒரு தகவலின் அடிப்படையில், நக்சலைட் கும்பலுக்கும்இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற புதிய சந்தேகம் கிளம்பியுள்ளது.

நாகப்பா பிணமாக கிடந்த செங்கடி என்ற இடம் கர்நாடக காட்டு எல்லைக்குள், தமிழக எல்லையிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தப் பகுதிக்குள் தமிழக அதிரடிப்படையினர் சென்று 2 மாதங்களாகிறதாம். எனவே தமிழக அதிரடிப்படைகாட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்பே இல்லை.

அதேசமயம், கர்நாடக அதிரடிப்படையும் சமீப காலமாக தேடுதல் வேட்டையை நிறுத்தி வைத்திருந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நக்சலைட் கும்பல் ஏதேனும் காட்டுக்குள் புகுந்திருக்கலாம் என்றுபோலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்தில் தர்மபுரி மாவட்டத்தில் ஊத்தங்கரை காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள் வேட்டை நடந்தது. அங்கு ஒருமாந்தோப்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நக்சலைட்டுகளை பாட்டாளி மக்கள் கட்சியினர் போலீசாரிடம் காட்டிக்கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸ் அவர்களை சுற்றி வளைத்தது. அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 5 பெண்கள் உள்பட25 நக்சலைட்டுகள் பிடிபட்டனர். ஆனால், பலர் தப்பி காட்டுப் பகுதிக்குள் ஓடிவிட்டனர்.

அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டகாடுகளுக்குள் தப்பியோடிய நக்சலைட்டுகள், கர்நாடக வன எல்லைக்குள் புகுந்திருக்க நிறையவேவாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வீரப்பனுடன் இருக்கும் தமிழக மீட்சிப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகஏற்கனவே போலீசார் கூறி வந்தனர்.

தங்கள் கூட்டாளிகளைக் கைது செய்தும் சுட்டும் வீழ்த்தியும் வரும் தமிழக அரசை பழிவாங்கும் வகையில்நக்சலைட்டுகளே வீரப்பனை நெருக்கி நாகப்பாவைக் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொளத்தூர் மணியை காட்டுக்குள் வர விடாமல் இடையூறாக இருந்து வரும் தமிழக அரசின் மீதும், தேடுதல்வேட்டையை நிறுத்தாமல் உள்ள தமிழக அதிரடிப்படை மீதும் எரிச்சலில் உள்ள வீரப்பன் நக்சலைட்டுகள்சொன்னதைக் கேட்டு நாகப்பாவை சுட்டுக் கொன்று விட்டு பழியை தமிழக அதிரடிப்படை மீது போட்டிருக்கலாம்என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

நாகப்பாவின் மரணத்தில் நக்சலைட்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தமிழக உளவுப் பிரிவுபோலீசாரின் விசாரணை தொடங்கியுள்ளது.

வீரப்பன் நடமாட்டம் குறித்து தகவல் தந்து வரும் போலீஸ் இன்பார்மர்களான ஆதிவாசிகளிடம் இந்த விசாரணைநடந்து வருகிறது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+