காயல்பட்டினத்தில் 3 தீவிரவாதிகளைத் தேடி போலீசார் வேட்டை
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பதுங்கியுள்ளதாக கூறப்படும் 3 இஸ்லாமிய தீவிரவாதிகளைப்போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக சென்னையில் ஜக்காரியா, தெளபீக்,தஞ்சையில் நிசாமுதீன், இமாம், வலியுல்லா, அப்துல் காதர், காயல்பட்டினத்தில் ஹமீத் பக்கிரி, அப்துல் மஜீத்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சென்னையில் மேலும் 2 பேரை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் காயல்பட்டினம் பகுதியில் சபியுல்லா, ஜக்காரியா, ஜவஹர் அலி ஆகிய மூன்று தீவிரவாதிகள்பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.விரைவில் மூன்று பேரும் பிடிபடுவார்கள் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications