பொள்ளாச்சியில் எரிசாராயம் பறிமுதல்: கேரளாவில் இருந்து பெங்களூர் கடத்தப்பட்டபோது பிடிபட்டது
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே ஒரு தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார்கைப்பற்றினர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் போலி மது தயாரிக்க இந்த எரிசாராயம்கடத்தப்பட்டு வந்துள்ளது.
முதலில் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு எரிசாராயம் கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மதுவிலக்குப் பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சமத்தூர் என்ற கிராமத்தில்நடந்த சோதனையில் ஒரு வேன் பிடிபட்டது.
அதில் எட்டு பெரிய பிளாஸ்டிக் கேன்களில் 280 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வேனை பறிமுதல்செய்த போலீசார் அதில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.
நடுரோட்டில் வைத்தே அவர்களுக்கு அடி விழுந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தொண்டமுத்தூர்அருகே ஒரு தென்னந்தோப்பிலும் எரிசாராயம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அந்த தோப்பில் 96 கேன்களில் வைக்கப்பட்டிருந்த 6,000 லிட்டர்எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். அதைக் கடத்துவதற்காக நினறிருந்த லாரியையும் கைப்பறறிய போலீசார் தோப்பில்பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த எரிசாராயத்தின் மதிப்பு ரூ. 5 லட்சத்தைத் தாண்டும். மேலும் 4 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும் செல்போன்களும்கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 6 பேரில் 3 பேர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள்.
கேரளாவில் இருந்து தொடர்ந்து இந்த எரிசாராயம் பொள்ளாச்சியில் பதுக்கப்பட்டு பெங்களூருக்குக் கடத்தப்பட்டு வந்ததாககோவை ஊரக மாவட்ட எஸ்.பி. தினகரன் தெரிவித்தார்.
இதைக் கொண்டு பெங்களூரில் ஏராளான போலி மது தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications